| விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் |
| தங்கள் |
| மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே |
| புனைந்தான், மௌலி. |
|
அரி அணை அனுமன் தாங்க - சிங்காதனத்தை அனுமன் காத்து நிற்கவும்; அங்கதன் உடைவாள் ஏந்த- அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்கவும்; பரதன் வெண்குடை கவிக்க- வெண் கொற்றக் குடையைப் பரதன் பிடித்து நிழற்றவும்; இருவரும் கவரி பற்ற - இலக்குவ சத்துருக்கர் இருவரும் சாமரை ஏந்தவும்; விரைசெறி - மணம் கமழ்கிற; குழலி ஒங்க - கூந்தலை உடைய பிராட்டி பெருமிதமாய் விளங்கவும்; வெண்ணெயூர்ச் சடையன்- திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்; தங்கள் மரபுளோர்- கால் வழியின் முன்னோராக உள்ளோர்;கொடுக்க வாங்கி- கொடுக்கப் பெற்றுக்கொண்டு; மௌலி - மகுடத்தை; வசிட்டனே புனைந்தான்- வசிட்ட முனிவனே சூட்டினான். |
கம்ப நாடர் இப்பாடலில் தன்னை வாழ்வித்த சடையப்ப வள்ளலுக்கு எந்நாளும் அழியாத நன்றி மகுடம் சூட்டியுள்ளார். மன்னர்க்கு முடி கவிக்கும் உரிமை வேளாளருக்கு இருந்ததைச் சோழ நாட்டு வரலாறு கூறும். அத் தமிழ் மரபை இங்கு இணைத்து மகிழ்கிறார் கம்ப நாடர். |
வசிட்டனே என்று தேற்றேகாரம் அமைந்தமைக்குக் காரணம், முன்னம் வசிட்டன் திட்டமிட்ட பட்டாபிடேகம் நிறைவேறாது போக, இன்று தானே மீண்டும் முடிசூட்டினான் என்பதை உணர்த்தவே ஆகும். இனி மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து வருமாறு. |
பதினான்கு ஆண்டுகள் இராமபிரான் வனவாசம் செய்ததனால் பெற்ற பேறு அனுமனும் அங்கதனும் ஆதலின் அவர்களைப் பரதன் முதலோனோர்க்கு முன் இம்முடி சூட்டும் பாடலில் கூறினார் கம்பர். இராமனையும் இலக்குவனையும் பரதனையும் பிராட்டியையும் மீட்டுத் தந்த பெருமை அனுமனுக்கே உரியதாதலின் அவனே அரியணை நிலைத்தற்கும் உரியவன் என்னும் கருத்தினால் அவனை முதற்கண் 'அரியணை அனுமன் தாங்க' என்றார். இதனை கம்ப. 4143 ஆம் பாடல் கொண்டும் அறிக. முன்பு அங்கதனுக்கு அடைக்கலம் அளித்த போது ''பொன்னுடை வாளை நீட்டி நீ இது பொறுத்தி'' (கம்ப. 4093) என்றதனை நினைப்பிற் கொண்டு 'அங்கதன் உடைவாள் ஏந்த' என்று கூறினார். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முடிசூட்டு விழா நடந்திருக்கு |