பக்கம் எண் :

622யுத்த காண்டம் 

மானால் இவ்விருவரையும் ஆண்டுக் காணமுடியாதன்றோ என்பதனை
நினையுங்கால்   இப்பாடலின் சிறப்பும்   வரிசைமுறையும் அழகும்
புலனாகும் என்பது. இராமபிரானது    வனவாசமாகிய முதலுக்குக்
கிடைத்த வட்டி அனுமனும் அங்கதனும்  என்பர் வாகீசகலாநிதி
கி.வா. ஜகந்நாதன் அவர்கள்.
 

(38)
 

10328.

வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின்

கொண்ட

ஒள்ளிய நாளின், நல்ல ஓரையின், உலகம் மூன்றும்

துள்ளின குனிப்ப, மோலி சூடினன் - கடலின் வந்த

தெள்ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும்

தோளான்.

  

கடலின் வந்த- திருப்பாற் கடலில் தோன்றிய; தெள்ளிய
திருவும்
- தெளிந்த அழகுடைய இலக்குமியும்; தெய்வப் பூமியும்
- தெய்வத்       தன்மை    மிக்க பூமிப் பிராட்டியும்; சேரும் -
அணைகின்ற; தோளான் - தோளை உடையவனாகிய இராமபிரான்;
கொண்ட    ஒள்ளிய நாளின்-     தேர்ந்தெடுத்த    சிறந்த
நன்னாளில்;நல்ல ஓரையின் -    சிறந்த நல்    வேளையில்;
உலகம் மூன்றும் துள்ளின குனிப்ப - மூன்று உலகமும் மகிழ்ச்சி
நிரம்பியவாறு வணங்க; வெள்ளியும் பொன்னும் ஒப்பார் -
அசுர குரு சுக்கிரனும், தேவ குரு வியாழனும் போன்ற நல்லோர்;
விதி முறை- விதித்த முறைப்படியே;மௌலி- மகுடத்தை;
மெய்யின் சூடினன் - தலையில் சூடிக் கொண்டான்.
 

(39)
 

10329.

சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர்த் தெய்வ

நன்னூல்

வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியதுஎனினும்,

மேன்மை

ஒத்த மூஉலகத்தோர்க்கும் உவகையின் உறுதி

உன்னின்,

தம்தம் உச்சியின்மேல் வைத்தது ஒத்தது, அத் தாம

மோலி.

 

திரு நகர்த் தெய்வ நன்னூல் - அத்திரு நகர்க் கண் உள்ள
தெய்வச் சிறப்பு வாய்ந்த நூல்களில்;  வித்தகன்-  வல்லவனும்;