பக்கம் எண் :

 திருமுடி சூட்டு படலம்623

சித்தம் ஒத்துளன் - மனத்துக்கு இசைந்தவனும்; என்று ஓதும்
ஒருவன் - என்று பேசப்படும் ஒப்பற்ற வசிட்ட மாமுனிவன்;
சென்னி மிலைச்சியது எனினும் - இராமபிரான்    தலையில்
சூட்டியது என்றாலும்; அத் தாம மோலி- அவ்வொளி மிகுந்த
மகுடம்; மேன்மை ஒத்த -   மேன்மை    பொருந்திய; மூ
உலகத்தோர்க்கும்
- மூன்று உலகிலுள்ளோருக்கும்; உவகையின்
உறுதி உன்னின்
-      (அப்போது ஏற்பட்ட)   மகிழ்ச்சியின்
அளவை எண்ணினால்; தம்தம் உச்சியின் மேல் -   தம்
சொந்தத் தலையின் மீது; வைத்தது ஒத்தது - வைத்தாற்
போல் அமைந்திருந்தது.
 

(40)
 

10330.

பல் நெடுங் காலம் நோற்று, தன்னுடைப் பண்பிற்கு

ஏற்ற

பின் நெடுங் கணவன்தன்னைப் பெற்று, இடைப்

பிரிந்து, முற்றும்

தன் நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க் கை

நீட்டி,

நல் நெடும் பூமி என்னும் நங்கை, தன் கொங்கை

ஆர.

 

பல் நெடுங்காலம் நோற்று- பல்லாண்டுகள் நீண்ட காலம்
நோன்பிருந்து; தன்னுடைய   பண்பிற்கு ஏற்ற -   தன்னுடைய
தகுதிக்கு ஏற்றவாறு;நெடுங் கணவன் பெற்று- உயர்ந்த கணவனை
அடைந்து;   இடை பிரிந்து-     சிறிது   காலம்    அவனைப்
பிரிந்திருந்து; தன்   நெடும் பீழை   முற்றும் நீங்க-   தன்
பெருந்துன்பம் முழுவதும் நீங்கிவிட;   நன்னெடும் பூமி என்னும்
நங்கை
- சிறந்த     பெரிய பூமி   என்னும் மாது; தளிர்க் கை
நீட்டி
- தளிர்க் கரம் நீட்டி;    தன் கொங்கை     ஆர- தன்
மார்பு குளிர; தழுவினாள் - தழுவி இன்புற்றாள்.
 

(41)
 

பரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுதல்
 

10331.

விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை

நோக்கி,

வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம்

சூட்டி,