விரத நூல் முனிவன்- விரதம் வழுவாத வேதம் வல்ல வசிட்ட முனிவன்;சொன்ன- சொல்லிய; விதிநெறி - விதி முறைகள்; வழாமை நோக்கி -தவறாது காத்து;வரதனும் - அருளாளனாகிய இராமபிரானும்; இளைஞர்க்கு- தன் தம்பிமார் மூவர்க்கும்; மாமணி மகுடம் சூட்டி- மாணிக்கம் இழைத்த உயர்ந்த மகுடம் அணிவித்து; பரதனை - பரத நம்பியை; தனது செங்கோல் நடாவுறப் பணித்து - தன் செங்கோலாட்சி நடத்துமாறு கட்டளையிட்டு; நாளும் - நாள்தோறும்; கரை தெரிவிலாத போகக் களிப்பினுள் இருந்தான் - எல்லையற்ற இன்ப மகிழ்ச்சியில் திளைத்திருந்தான். |