பக்கம் எண் :

626யுத்த காண்டம் 

பூமகட்கு அணி அது என்ன- நிலமகளுக்கு இது ஓர்
அணிகலன் என்று சொல்லும்படியாக;பொலி பசும் பூரி சேர்த்தி
மாமணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்
-
விளங்கும்   பசிய    பொன்னைக்   கொண்டு     சிறந்த
மணிக்கற்களால்   ஆகிய   தூண்களை   அமைத்துச்   செய்த
திருவோலக்க மண்டபத்தின் நடுவில்; கோமணிச் சிவிகை
மீதே
- சிறந்த மணிகள்     அழுத்திச்   செய்த பல்லக்கின்
மேல்; கொண்டலும் மின்னும் போல- மேகமும்   மின்னலும்
போல; தயரதராமன்- தசரத   சக்கரவர்த்தியின் புதல்வனான
ஸ்ரீராமன்; தாமரைக் கிழத்தியோடும்- தாமரை     மலரில்
வீற்றிருக்கும் திருமகளாகிய சீதாபிராட்டியோடும்;
சார்ந்தான்- வந்து சேர்ந்தான்.
 

பல்லக்கில் ஏறி அத்தாணி மண்டபத்துக்கு வந்து
சேர்ந்தான். பூரி - பொன்.
 

(1)
 

10333.

விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க,

எரி கதிர்க் கடவுள்தன்னை இனமணி மகுடன் ஏய்ப்ப,

கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர்க் காடு பூத்து,

ஓர்

அரியணைப் பொலிந்தது என்ன, இருந்தனன்,

அயோத்தி வேந்தன்.

 

அயோத்தி வேந்தன்- அயோத்தி நகருக்கு அரசனான
ஸ்ரீராமன்; விரிகடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க
- அகன்ற கடலின் நடுவில் தோன்றிய மின்னலைப் போல முத்தாரம்
மார்பில் தோன்ற; எரி கதிர்க்கடவுள்   தன்னை     இனமணி
மகுடம் ஏய்ப்ப
- பிரகாசிக்கிற ஆயிரம்   கிரணங்களை   உடைய
சூரியனைக் கூட்டமான மணிகள் அழுத்திச்     செய்யப்    பெற்ற
கிரீடம் ஒத்திருக்க;       கருமுகிற்கு   அரசு   செந்தாமரை
மலர்க்காடு பூத்து
- கருமேகத்துக்கு அரசானது     செந்தாமரைப்
பூக்கள் காடுபோலத் தன்னிடையே பூக்கப் பெற்று; ஓர் அரியணைப்
பொலிந்தது என்ன இருந்தனன்
- ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருந்தது
என்று சொல்லும்படி வீற்றிருந்தான்.
 

(2)
 

10334.

மரகதச் சயிலமீது வாள் நிலாப் பாய்வது என்ன,

இரு குழை இடறும் வேற் கண், இளமுலை, இழை

நலார்தம்