| கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற, |
| உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த, |
|
மரகதச் சயில மீது வாள் நிலாப் பாய்வது என்ன - பச்சைமணியால் ஆகிய மலையின் மேல் ஒளி நிலா வெள்ளம் பாய்வது போல; இருகுழை இடறும் வேற்கண், இளமுலை, இள நலார்தம் கர கமலங்கள் பூத்த கற்றை அம்கவரி தெற்ற- இரண்டு காதணிகளை முட்டித்தள்ளும் வேல் போன்ற நீண்ட கண்களையும், இளமுலைகளையும் உடைய இளமையும் அழகும் உடைய மகளிரது கைகளாகிய தாமரை மலரில் பூத்த வெண் சாமரைகள் மேலே வீசப்பெற; உரகரும் நரரும் வானத்து உம்பரும் பரவி ஏத்த- நாகலோகத்தினரும், புனிதர்களும் தேவலோகத் தேவரும் பரவித் தோத்திரம் செய்ய. |
(3) |
10335. | உலகம் ஈர் - ஏழும் தன்ன ஒளி நிலாப் பரப்ப, வானில் |
| திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து, |
| எளிதின் தேய, |
| கலக வாள் நிருதர் கோனைக் கட்டழித்திட்ட கீர்த்தி |
| இலகி மேல் நிவந்தது என்ன, எழு தனிக் குடை |
| நின்று ஏய. |
|
திலக வாள் நுதல் - இராமபிரானது திலகம் அணிந்த ஒளிபடைத்த நெற்றி; உலகம் ஈர்எழும் தன்ன ஒளிநிலாப் பரப்ப- பதினான்கு உலகங்களிலும் தனது நிலவொளியைப் பரவச் செய்தலால்; வானில் வெண் திங்கள் சிந்தை நொந்து எளிதின் தேய - வானத்தில் வரும் வெண்ணிலவானது மனம் வருந்தி மெல்ல மெல்லத் தேய்ந்து போக; எழுதனிக் குடை- அரியணைக்கு மேலாக எழுந்துள்ள வெண்கொற்றக் குடையானது; கலக வாள் நிருதர் தன்னைக் கட்டழித்திட்ட கீர்த்தி இலகி மேல் நிவந்தது என்ன- கலகமிடுகின்ற கொடிய அரக்கர்களை அடியோடு இல்லையாம் படிச் செய்த பெரும்புகழ் விளங்கி மேல் உயர்ந்துள்ளது போல; நின்று ஏய- நின்று பொருத்தமுற அமைய. |
புகழ் வெண்மை நிறமாதலின் அது குடைக்கு உவமையாயிற்று. 'திலகவாள் நுதல் போன்ற வெண்திங்கள்' என்று நுதலைத் திங்களுக்கு அடையாக்கி, குடையின் ஒளி நிலா உலகம் ஈரேழும் பரவுதலால் திங்கள் சிந்தை நொந்து தேய' எனப் பொருள் உரைத்தல் சிறந்தது என்பது என் |