குருநாதர் மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து. |
(4) |
10336. | மங்கல கீதம் பாட, மறையவர் ஆசி கூற, |
| சங்குஇனம் குமுற, பாண்டில் தண்ணுமை துவைப்ப, |
| தா இல் |
| பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பொரு கயல் கருங் |
| கண், செவ் வாய் |
| பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில மாதோ. |
|
மங்கல கீதம் பாட- மங்கலப் பாடல்கள் பாடப்பெற; மறையவர் ஆசி கூற- அந்தணர்கள் ஆசீர்வாத மொழிகளைக் கூற; சங்கு இனம் குமுற- சங்கங்கள் ஊதப் பெற; பாண்டில் தண்ணுமை துவைப்ப - தாளமும் மத்தளமும் ஒலியைச் செய்ய; தாஇல் பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப - குற்றமற்ற பலவகையான வாத்தியங்கள் ஆரவாரிப்ப;பொருகயல், கருங்கண், செவ்வாய், பங்கய முகத்தினார்கள் - பொருகின்ற கயல்மீன் போன்ற கரிய கண்ணையும், சிவந்த வாயையும் உடைய தாமரை போன்ற முகத்தினராய மகளிர்கள்; மயில் நடம் பயில- மயில் போல நடனம் ஆடவும். |
பாண்டில் - தாளம், மாதோ - அசை. |
(5) |
10337. | திரை கடல் கதிரும் நாணச் செழு மணி மகுட கோடி |
| கரை தெரிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப, |
| நாளும் |
| வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து, மன்னர் |
| பரசியே வணங்கும்தோறும் பதயுகம் சேப்ப மன்னோ. |
|
திரைகடல் கதிரும் நாண- அலைகடலின் மேல் தோன்றுகின்ற உதய சூரியனும் நாணமுறும் படி; செழுமணி மகுட கோடி- (வணங்க வந்த மன்னர்களின்) செழுமையான மணிகள் அழுத்திச் செய்யப் பெற்ற மகுட வரிசைகள்; கரை தெரிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப- முடிவு காணமுடியாத சோதிப் பிரகாசத்தை எங்கும் பரவச் செய்யும்படி; நாளும் வரைபொரு மாட வாயில் நெருக்குற வந்து- நாள்தோறும் மலையொத்த அரண்மனை வாயிலில் நெருக்கித்தள்ளி வந்து; மன்னர் பரசியே |