பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்629

வணங்குந்தோறும் பதயுகம் சேப்ப- அரசர்கள் விழுந்து
வணங்குதலால் திருவடியிணைகள் சிவந்து போகவும்.
 

(6)
 

10338.

மந்திரக் கிழவர் சுற்ற, மறையவர் வழுத்தி ஏத்த,

தந்திரத் தலைவர் போற்ற, தம்பியர் மருங்கு சூழ,

சிந்துரப் பவளச் செவ் வாய்த் தெரிவையர் பலாண்டு

கூற,

இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்தகாலை.

 

மந்திரக் கிழவர் சுற்ற- அரசனது ஆலோசனைக்குரிய
அமைச்சர் முதலியோர் சுற்றியிருப்ப; மறையவர் வழுத்தி
ஏத்த
- அந்தணர்கள்   தோத்திரம்   செய்து   பாராட்ட;
தந்திரத் தலைவர் போற்ற- சேனைத் தலைவர்கள் துதிக்க;
தம்பியர் மருங்கு சூழ- பரத இலக்குவ சத்துருக்கனராகிய
தம்பிமார்கள் பக்கத்தில்   சூழ    இருப்ப; சிந்துரப் பவளச்
செவ்வாய்த் தெரிவையர் பலாண்டு கூற
- செந்நிறமான பவளம்
போன்ற சிவந்த வாயை உடைய மகளிர்கள் பல்லாண்டு கூறி
வாழ்த்த; (இவ்வாறு) எம்பிரான்- ஸ்ரீராமபிரான்; இந்திரற்கு
உவமை ஏய்ப்ப இருந்த காலை
- இந்திரன் திருவோலக்க
மிருந்தமைக்கு உவமை சொல்லலாம் படி வீற்றிருந்த பொழுது.
 

இராமபிரானது திருவோலக்கத்துக்கு இந்திரனது
திருவோலக்கத்தை உவமை யாக்கினால் இந்திரனது
திருவோலக்கம் இதனினும் சிறந்ததாகிவிடும்; 'உவமை
உயர்ந்ததாதலின்' என்று கருதிய கவிச் சக்கரவர்த்தி
உவமையாக்கி இதுபோல இந்திரனது திருவோலக்கம்
உள்ளது என்று சொல்லி அதனினும் இது மேம்பட்டது
என்ற கருத்தைப் பெற வைக்கவே 'இந்திரற்கு உவமை
ஏய்ப்ப எம்பிரான் இருந்த' என்றார். இந்நயம் நினையுந்தொறும்
இன்பம் பயப்பது என்பது என் குருநாதர் மகாவித்துவான்,
மயிலம். வே.சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.
 

(7)
 

சுக்ரீவன், வீடணன், குகன் வணங்கல்
 

10339.

மயிந்தன், மா துமிந்தன், கும்பன், அங்கதன்,

அனுமன், மாறு இல்

சயம் தரு குமுதக்கண்ணன், சதவலி, குமுதன், தண்

தார்

நயம் தெரி ததிமுகன், கோகசமுகன் முதல நண்ணார்

வியந்து எழும் அறுபத்து ஏழு கோடியாம் வீரரோடும்.