| உண்டு வெள்ளம் ஓர் எழுபது; மருந்து ஒரு நொடியில் |
| கொண்டு வந்தது, மேருவுக்கு அப்புறம் குதித்து. |
|
மண்டு போர் செய, கடலினை மலை கொண்டு கட்டி- நெருங்கிப் போர் செய்யும் பொருட்டு கடலினை மலை கொண்டு அடைத்துக் கட்டி; வானரர் இயற்றிய மார்க்கம் கண்டிலீர் கொலாம்- (நீவிர் இகழ்ந்து கூறிய) குரங்குகள் ஏற்படுத்திய சேதுவாகிய வழியினைக் கண்டிலீரோ? ஓர் எழுபது வெள்ளம் உண்டு - பகைவரிடம் (இந்த வல்லமையுள்ள குரங்குகள் கொண்ட) ஓர் எழுபது வெள்ளம் சேனை உளது; மேருவுக்கு அப்புறம் குதித்து மருந்து ஒரு நொடியில் கொண்டு வந்தது- (அப்படையில் ஒரு குரங்கு) மேரு மலைக்கு அப்புறத்தே குதித்து ஒரு நொடிப் பொழுதில் (உயிரைத் தருகின்ற) மருந்தினைக் கொண்டு வந்தது. |
மார்க்கம் - வழி. இங்கு சேதுவைக் குறித்தது, கொலாம் - கொல் ஐயம். |
(47) |
9294. | 'இது இயற்கை; ஓர் சீதை என்று இருந்தவத்து |
| இயைந்தாள், |
| பொது இயற்கை தீர் கற்புடைப் பத்தினி பொருட்டால், |
| விதி விளைத்தது; அவ் வில்லியர் வெல்க! நீர் |
| வெல்க! |
| முதுமொழிப் பதம் சொல்லினென்' என்று, உரை |
| முடித்தான். |
|
இது இயற்கை; ஓர் சீதை என்று இருந்தவத்து இயைந்தாள் - இது பகைவர் தம் சேனையின் இயல்பு; ஒப்பற்ற சீதை என்று மிக்க தவத்துடன் கூடியவளான; பொது இயற்கை தீர் கற்புடைப் பத்தினி பொருட்டால் - பொது இயற்கையொழிந்த (பிறர் எவர்க்கும் இல்லாது தனக்கே சிறப்பாக அமைந்த) கற்பினை உடைய ஒரு பத்தினியை முன்னிட்டு; விதி விளைத்தது; அவ்வில்லியர் வெல்க, நீர் வெல்க- விதியே (இத்தகு பகையை) விளைவித்தது. அந்த வில்லாளர்களே வெற்றி பெறுக (அன்றி) நீர் வெற்றி பெறுக; முதுமொழிப்பதம் சொல்லினென் என்று உரை முடித்தான் - முதுவோர் மொழிதற்குரிய சொல்லைச் சொன்னேன் என்று மாலியவான் தன் உரையை முடித்துக் கொண்டான். |