மயிந்தன், மாதுமிந்தன், கும்பன், அங்கதன், அனுமன், மாறுஇல் சயம் தரு குமுதக்கண்ணன், சதவலி, குமுதன், தண்தார் நயம் தெரி ததிமுகன், கோகசமுகன் முதல நண்ணார் வியந்து எழும்- பகைவர்கள் ஆச்சரியப்படும்படியான; அறுபத்து ஏழு கோடியாம் வீரரோடும்- வானர சேனைத் தலைவர்கள் அறுபத்தேழு கோடியினர். சுக்கிரீவனுடன் வந்தோர்களுடன். |
(8) |
10340. | ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற |
| வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் |
| சூழ, |
| தேன் இமிர் அலங்கல் பைந் தார் வீடணக் குரிசில், |
| செய்ய |
| மான வாள் அரக்கரோடு வந்து, அடி வணங்கிச் |
| சூழ்ந்தான். |
|
ஏனையர் பிறரும் சுற்ற- எழுபது வெள்ளத்துற்ற வானரரோடும்; வெய்யோன் மகன்- சுக்கிரீவன்; வந்து வணங்கிச் சூழ - தேன் இமிர் அலங்கல் பைந்தார் வீடணக் குரிசில் - வண்டுகள் ஒலிக்கின்ற அசையும் பசிய மாலை அணிந்த வீடண நம்பி; செய்யமான வாள் அரக்கரோடும் வந்து - சீரிய பெருமை படைத்த கொடிய அரக்கர்களோடும் வந்து; அடிவணங்கிச் சூழ்ந்தான் - இராமன் திருவடியை வணங்கிச் சுற்றியிருந்தான். |
(9) |
10341. | வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் |
| புலியின் வெவ் வால் |
| சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் |
| கண்ணன், |
| கல் திரள் வயிரத் திண் தோள் கடுந் திறல் |
| மடங்கல் அன்னான், |
| எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், |
| தொழுது சூழ்ந்தான். |
|
வெறிப் பொறிப் புலியின் வெவ்வால்- நிறம் அமைத்த புள்ளிகளை உடைய புலியின் கொடிய வாலை; சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன் - சுற்றி இழுத்துக் கட்டிய இடுப்பை உடைய; சுழலும் கண்ணன் - சுழல்கின்ற கண்களை உடைய; கல்திரள் |