வயிரத்திண்தோள் - கல்லைப் போல உருண்ட வலிய தோள்களை உடைய; கடுந்திறல் மடங்கல் அன்னான் - மிக்க வலிமை படைத்த சிங்கத்தைப் போன்றவனாகிய; எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை குகன்- கரையோடு மோதுகின்ற நீர்ப்பெருக்கினை உடைய கங்கையில் உள்ள மரக்கலங்களுக்குத் தலைவன் ஆகிய குகன்; வெற்றி வெஞ்சேனையோடும் - தன்னுடைய வெற்றி பெற்ற கொடிய சேனையோடும்;தொழுது சூழ்ந்தான் - இராமனை வணங்கிச் சுற்றி இருந்தான். |
(10) |
இராமன் அனைவர்க்கும் முகமன் கூறல் |
10342. | வள்ளலும் அவர்கள்தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த |
| காதல் |
| உள்ளுறப் பிணித்த செய்கை ஒளி முகக் கமலம் |
| காட்டி, |
| அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து, |
| இனிதின் நோக்கி, |
| 'எள்ளல் இலாத மொய்ம்பீர்! ஈண்டு இனிது |
| இருத்திர்' என்றான். |
|
வள்ளலும் - இராமபிரானும்; அவர்கள் தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல் - அத்துணைவர்களிடத்து அளவுபடாது வளர்ந்த பேரன்பானது; உள்ளுறப் பிணித்த செய்கை- தன்மனத்தை இறுகக் கட்டியிருக்கிற பாங்கினை; ஒளி முகக் கமலம் காட்டி- ஒளி சிறந்த தனது முகத்தாமரை மூலம் காண்பித்து; அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து- நெஞ்சாரத் தழுவினவனைப் போல மனம் மகிழ்ச்சி அடைந்து; இனிதின் நோக்கி - கருணைப் பார்வையால் இனிமையாகப் பார்த்து; 'எள்ளல் இலாத மொய்ம்பீர் - இகழப் படாத வலிமை படைத்தவர்களே!ஈண்டு இனிது இருத்திர் - இங்கே இனிமையாக இருங்கள்; என்றான் - |
(11) |
10343. | நல் நெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர், |
| மற்றைச் |
| சொல் நெறி அறிவு நீரார், தோம் அறு புலமைச் |
| செல்வர், |