| பல் நெறிதோறும் தோன்றும் பருணிதர், பண்பின் |
| கேளிர், |
| மன்னவர்க்கு அரசன் பாங்கர், மரபினால் |
| சுற்றம்ன்னோ. |
|
நல்நெறி அறிவு சான்றோர்- சாத்திரங்களிற் கூறப்பட்ட நல்ல வழிகளால் ஆகிய அறிவான் அமைந்தவர்கள்; நான்மறைக் கிழவர் - சதுர் வேத பாரகர்; மற்றைச் சொல் நெறி அறிவு நீரார் - வேறுபட்ட பல்துறை அறிவிற் சிறந்த தன்மை உடையவர்கள்; தோம் அறு புலமைச் செல்வர் - குற்றமற்ற புலமையால் உயர்ந்தவர்கள்; பல்நெறிதோறும் தோன்றும் பருணிதர்- பல்வகைப்பட்ட சாத்திரங்களினும் நுட்ப அறிவு பெற்ற நிபுணர்கள்; பண்பின் கேளிர்- நற்குணங்களுக்கு உறைவிடம் ஆனவர் (ஆகியோர்); மன்னவர்க்கு அரசன் பாங்கர் - சக்கரவர்த்தியாகிய ஸ்ரீராமன் அருகில்; மரபினால் சுற்ற - அவரவர்க்கு உரிய முறைமைப் படி சுற்றியிருப்ப. |
மன், ஓ - அசைநிலை. |
(12) |
10344. | தேம் படு படப்பை மூதூர்த் திருநகர் அயோத்தி |
| சேர்ந்த |
| பாம்பு - அணை அமலன்தன்னைப் பழிச்சொடும் |
| வணக்கம் பேணி, |
| வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும் |
| ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின், இரு மதி |
| இறந்தது அன்றே. |
|
தேம்பரு படப்பை மூதூர்த் திருநகர் அயோத்தி சேர்ந்த பாம்பணை அமலன் தன்னைப் பழிச்சொடு வணக்கம் பேணி- தேன் சிந்துகின்ற சோலைகள் சூழ்ந்த பழமையான ஊராகிய அயோத்தி என்னும் திருநகரை வந்தடைந்த ஆதிசேஷ சயனனாகிய பெரிய பெருமாளைத் தோத்திரம் செய்து வணங்கி;வாம்புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்- தரைமேல் வாவுகின்ற நீரை உடைய கடலாற் சூழப் பெற்ற இவ்வுலகத்து அரசர்களும் மற்றும் உள்ளவர்களும்; ஏம்பல் உற்று இருந்தார் - மகிழ்ச்சி அடைந்து இருந்தார்கள் (இவ்வாறு); நொய்தின்-இலேசாக;இருமதி இறந்தது - இரண்டு திங்கள் சென்றது. |