'பாம்பணை அமலன்' இட்சுவாகு குலதனமாகிய ஸ்ரீரங்கநாதன் என்னும் பெரிய பெருமாளாகும். திருமாலின் அவதாரமாகிய ஸ்ரீராமன் என்றுரைப்பாரும் உளர். அது முன்னும் இப்படலத்துப் பல இடங்களிலும் வந்துள்ளமையின் பெரிய பெருமாள் என்பதே இங்குச் சிறப்புடைத்து. அன்று, ஏ - அசைகள். |
(13) |
10345. | நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங் கடற் கிடை |
| நின்று ஏத்த, |
| பொருக்கென அயோத்தி எய்தி, மற்று அவர் |
| பொருமல் தீர, |
| வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரி வில் |
| கொண்ட |
| திருக் கிளர் மார்பினான் பின் செய்தது |
| செப்பலுற்றாம்: |
|
நெருக்கிய அமரர் எல்லாம்- ஒன்று திரண்ட தேவர்கள் எல்லாம்; நெடுங்கடற்கு இடைநின்று ஏத்த - பெரிய திருப்பாற் கடலின் இடையிலே நின்று துதிக்க; மற்று அவர் பொருமல் தீர - துன்புற்ற அவர்களது துயரம் நீங்கும்படி; பொருக்கென- விரைவாக; அயோத்தி எய்தி- அயோத்தியை அடைந்து; அரக்கர் யாரும் வருக்கமொடு மடிதர - அரக்கர்கள் எல்லாம் தம் கூட்டத்தோடு அழிந்து போக;வரிவில் கொண்ட திருக்கிளர் மார்பினான் - கட்டமைந்த வில்லைக் கையில் ஏந்திய திருமகள் விளங்கும் மார்பினனாகிய ஸ்ரீராமன்; பின் செய்தது செப்பலுற்றாம் - பின்னால் செய்த செயல்களைக் கூறத் தொடங்கினோம். இது கவிக்கூற்று. |
இதனை முன்னர் 184 முதல் 203 வரை உள்ள பாலகாண்டப் பாடல்களைப் பொருத்தி அறிந்து கொள்க. |
(14) |
மறையவர் தானம் கொள்ளல் |
10346. | மறையவர்தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும் |
| பொன்னும், |
| நிறை வளம் பெருகு பூவும், சுரபியும், நிறைத்து, |
| மேல் மேல், |