| 'குறை இது; என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு | | அறக் கொடுத்து, பின்னர், | | அறை கழல் அரசர்தம்மை 'வருக' என அருள, | | வந்தார். | | (இராமன்)- மறையவர் தங்கட்கு எல்லாம் - அந்தணர்க்கெல்லாம்; மணியொடு முத்தும் பொன்னும் -; நிறைவளம் பெருகு பூவும் சுரபியும் - நிறைந்த வளந்தரக்கூடிய பூமியும், பசுவும்;நிறைத்து - நிறையும்படிக் கொடுத்து;மேல் மேல்- மேலும் மேலும்; 'குறை இது' என்று இரந்தோர்க் கெல்லாம் குறைவு அறக் கொடுத்து - தமக்கு இது வேண்டும் என்று கேட்டவர்களுக்கெல்லாம் அவர்களுடைய குறைவு தீரும்படி வேண்டுமளவு கொடுத்து; பின்னர்- பிறகு; அறை கழல் அரசர்தம்மை - ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அரசர்களை; 'வருக' என அருள- வருக என்று அழைத்தருள; வந்தார் - அவர்களும் வந்தார்கள். | (15) | இராமன் யாவர்க்கும் விடை கொடுத்தல் | 10347. | அய்யனும் அவர்கள்தம்மை அகம் மகிழ்ந்து, அருளின் | | நோக்கி, | | வய்யகம், சிவிகை, தொங்கல், மா மணி மகுடம், | | பொன் பூண், | | கொய் உளைப் புரவி, திண் தேர், குஞ்சரம் ஆடை | | இன்ன | | மெய் உறக் கொடுத்த பின்னர், கொடுத்தனன் | | விடையும் மன்னோ. | | அய்யனும் - இராமனும்; அவர்கள் தம்மை - அரசர்களை; அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி- மனமகிழ்ச்சியுற்று அருளோடு பார்த்து; வையகம், சிவிகை, தொங்கல், மாமணி மகுடம், பொன்பூண், கொய் உளைப் புரவி, திண்தேர், குஞ்சரம், ஆடை இன்ன -; மெய் உறக் கொடுத்த பின்னர் - நன்றாக கொடுத்த பிறகு; விடையும் கொடுத்தனன் - அவர்கள் தம்மூர் செல்ல விடை ஈந்து அனுப்பினான். | மன், ஓ - அசைகள், வையகம் - எதுகை நோக்கி போலியாய் 'வய்யகம்' ஆயிற்று. தொங்கல் - மாலை. குஞ்சரம் - யானை. இவர்கள் முடிசூட்டுவிழாக் காண வந்தவர்கள். | (16) |
|
|
|