பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்635

10348.

சம்பரன்தன்னை வென்ற தயரதன் ஈன்ற காலத்து

உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளி மணிக்

கடகத்தோடும்,

கொம்புடை மலையும், தேரும், குரகதக் குழுவும்,

தூசும்,-

அம்பரம்தன்னை நீத்தான் - அலரி காதலனுக்கு

ஈந்தான்.

 

அம்பரம் தன்னை நீத்தான் - திருப்பாற்கடலைத் துறந்து
அயோத்தியில் அவதரித்த  இராமபிரான்;      சம்பரன்தன்னை
வென்ற தயரதன்
- இந்திரன் பகையாகிய   சம்பரனை வென்ற
தயரதசக்கரவர்த்தி; ஈன்ற காலத்து   - தன்னைப்   பெற்றெடுத்த
பொழுது;உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளிமணிக் கடகத்தோடும்
- தேவர் தலைவனாகிய இந்திரன் தனக்குக் கொடுத்த ஒளிபடைத்த
மணிகள் அழுத்திய கடகத்தோடும்; கொம்புடைமலையும்
யானைகளும்; தேரும்-;  குருகதக் குழுவும்-  குதிரைக் கூட்டமும்;
தூசும் - பட்டாடையும் (ஆகியவற்றை); அலரி - சூரியனது; 
காதலனுக்கு
- மகனாகிய சுக்கிரீவனுக்கு; ஈந்தான்-.
 

(17)
 

10349.

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம்

எல்லாம்

அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல்,

அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்ததனை

ஈந்தான்;

அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து

அறையகிற்பார்?

 

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும்- பழிப்பில்லாத
வெற்றியை உடைய இராகவனும்; அகிலம் எல்லாம்-      இந்த
உலகம் முழுவதும்; அங்கதன் என்னும் நாமம் - அங்கதன் என்ற
அவனுடைய பெயரை; அழகுறத் திருத்துமா போல்- அழகு
பொருந்த வழங்கச் செய்யுமாறு போல; அங்கதம்- தோள் வளையை;
கல்நல் தோளாற்கு  அயன் கொடுத்ததனை- கல்போன்ற நல்ல
தோளை உடைய இட்சுவாகு மன்னனுக்கு  பிரமன் கொடுத்ததாகிய
அதனை; ஈந்தான் - (அங்கதனுக்கு) கொடுத்தான்; அங்கு அதன்
பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார்?
- அந்தத்