பக்கம் எண் :

638யுத்த காண்டம் 

வயங்கு சீரான் - விளங்கிய புகழை உடைய இராமன்; என்றலும்
- இவ்வாறு  கூறுதலும்;   வணங்கி, நாணி, வாய் புதைத்து, இலங்கு
தானை முன்தலை ஒதுக்கி நின்ற   மொய்ம்பனை
-    பணிந்து
நாண்முற்று வாயைக்     கையால  புதைத்துக் கொண்டு விளங்கிய
வேட்டி முகப்பினை   அடக்கிக்   கொண்டு நின்ற வலியோனாகிய
அனுமனை; முழுதும்    நோக்கி - நன்றாகப்    பார்த்து; பொன்
திணி வயிரப்   பைம்பூண்  ஆரமும்
- பொன்   திணித்துச்
செய்யப் பெற்ற பசிய பூணும்    முத்துவடமும்; புனை மென் தூசும்-
அணிதற்குரிய    மெல்லிய     பட்டாடையும்; வன்திறல் கயமும் -
வலிமிக்க யானையும்; மாவும்- குதிரையும்; வழங்கினன்- ஈந்தான்.
 

தானை மடக்கலும் வாய்புதைத்தலும் அடக்கம் என்னும்
மெய்ப்பாட்டின் அடையாளம் ஆகும்.
 

(21)
 

10353.

பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மிதிலை பூத்த

தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து

நோக்க,

பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக்

கொண்டு

ஏமுறக் கொடுத்தான், அந்நாள், இடர் அறிந்து

உதவினாற்கே.

 

ஐயன் - இராமன்; பூ மலர்த் தலிசை நீத்து- தாமரை
மலராகிய பீடத்தை வெறுத்து; பொன் மதில் மிதிலை பூத்த
தேமொழித் திருவை
- பொன்னாற் செய்த   மதில் சூழ்ந்த
மிதிலையில் தோன்றிய  தேன்   போலும்   மொழியுடைய
திருமகளாகிய சீதையை;  திருவருள்    முகத்து நோக்க-
திருவருளோடு கூடிய முகத்தால் பார்க்க; (அவள்) அந்நாள்
இடர் அறிந்து உதவினாற்கு
- அசோக வனத்தில் தன்
துன்பமறிந்து உதவிய அனுமனுக்கு;பாமறைக் கிழத்தி ஈந்த
பருமுத்தமாலை கைக்கொண்டு ஏமுறக் கொடுத்தாள்
- பரவிய
வேதத்தலைவியாகிய சரஸ்வதி தேவி தனக்களித்த முத்து மாலை
ஒன்றைக் கையிற் கொண்டு இன்பமுறக் கொடுத்தாள். ஏ - அசை.
 

(22)
 

10354.

சந்திரற்கு உவமை சான்ற, தாரகைக் குழுவை

வென்ற,

இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தோடு