பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்639

கந்து அடு களிறு, வாசி, தூசு, அணிகலன்கள்,

மற்றும்

உந்தினன், எண்கின் வேந்தற்கு - உலகம் முந்து

உதவினானே.

 

உலகம் முந்து உதவினான்- உலகத்தை முற்காலத்துப்
பிரமனால் தந்தருளிய திருமாலின் அவதாரமான இராமன்;
சந்திரற்கு உவமை சான்ற-      நிலவுக்கு  உவமையாகச்
சொல்லப்படக் கூடிய; தாரகைக் குழுவை வென்ற- நட்சத்திரக்
கூட்டங்களை வென்ற; இந்திரற்கு ஏய்ந்த தாகும் என்னும்
முத்தாரத்தோடு
- இந்திரன் அணிதற்குப் பொருந்தியதாகும்
என்று சொல்லப்படும் முத்து மாலையோடு; கந்து அடுகளிறு,
வாசி, தூசு, அணிகலன்கள், மற்றும்
-     கட்டுத்தறியை
அழிக்கும் யானை, குதிரை, பட்டாடை, ஆபரணங்கள், ஏனைய
பிறவும்; எண்கின்    வேந்தற்கு உந்தினன் -    கரடிக்
கூட்டத்தின் தலைவனான சாம்பனுக்குத் தந்தான்.
 

(23)
 

10355.

நவ மணிக் காழும், முத்தும், மாலையும், நலம் கொள்

தூசும்,

உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல

பிறவும், ஒண் தார்க்

கவன வெம் பரியும், வேகக் கதமலைக்கு அரசும்,

காதல்

பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு

ஈந்தான்.

 

காதல் பவனனுக்கு இனிய நண்பன் பயந்து எடுத்தவனுக்கு-
அன்பால்      காற்றுக்கு இனிய நண்பனாகிய    அக்கினி தேவன்
மகனாகிய நீலன் என்னும் வானர சேனைத் தலைவனுக்கு; நவமணிக்
காழும்
- நவமணிகளால்   ஆகிய வடமும்;முத்தும் மாலையும்
நலங்கொள் தூசும் உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு
இல   பிறவும் - ;   ஒண்தார்க் கவன வெம் புரியும் வேகக்
கதமலைக்கு அரசும் - ; ஈந்தான்
- கொடுத்தான்.
 

தார் - கிண்கிணி மாலை, கவனம் - வேகம். கதமலை -
சீற்றமுடைய மலை போன்ற யானை.
 

(24)