பக்கம் எண் :

64யுத்த காண்டம் 

இது இயற்கை எனப் பகைப் படையின் தன்மையைக் கூறியவன்
இப்போர் ஒப்புவமையற்ற ஓர் கற்புடைப் பெண்ணின் பொருட்டால் 
விதி கூட்ட விளைந்துள்ளது. இதில்  அவர்களே வெல்வர் என்ற 
கருத்தை உடையவனாயினும்  நிலமைக்கேற்ப   அவரே வெல்க 
அல்லது   நீவிரே    வெல்க   எனப் பொதுவாகக்  கூறித்தான்
அனுபலங்களாலும் வயதாலும் முதிர்ந்தவனாதலின் தன்னுரையினை
முதுமொழி எனக் குறிப்பிட்டு மாலியவான் உரை முடிக்கின்றான். 
 

(48)
 

வன்னி 'பொருதலே தக்கது' எனல்
 

9295.

வன்னி, மன்னனை நோக்கி, 'நீ இவர் எலாம் மடிய, 

என்ன காரணம், இகல் செயாதிருந்தது?' என்று 

இசைத்தான்;

'புன்மை நோக்கினென்; நாணினால் பொருதிலேன் 

என்றான்;

'அன்னதேல், இனி அமையும் எம் கடமைஅஃது' 

என்றான்.

 

வன்னி, மன்னனை நோக்கி, இவர் எலாம் மடிய- வன்னி,
இராவணனை நோக்கி   'இவரெலாம் மடிந்து போகவும்; நீ இகல்
செயாதிருந்தது என்ன காரணம்? என்று இசைத்தான்
- நீ போர்
செய்யாதிருத்தற்கு என்ன காரணம்?  என்று  வினவினான்; புன்மை
நோக்கினன்; நாணினால் பொருதிலேன்' என்றான்
- (மனிதரையும் 
குரங்குகளையும் எதிர்த்துப் போர் செய்தலாகிய)  இழிவை நோக்கி, 
வெட்கத்தால் போர் செய்யவில்லை'  என்று  இராவணன் (அதற்குக்) 
கூறினான்; 'அன்னதேல்,  இனி   எம்  கடமை அஃது அமையும்' 
என்றான்
-அவ்வாறாயின் அவரோடு போர் செய்வது எம் கடமையாக 
அமையும் என வன்னி கூறினான்.
 

முதல் நாளே போருக்குப் போய்ப் பட்ட புன்மை காரணமாக
ஏற்பட்ட   நாணத்தினால்  பொருதிலேன்;''  என்ற  பொருளும்
அமைந்திருத்தல் காண்க, இங்கு இராவணன் தான் முதல் நாளே
போருக்குப்   போய்த் தோற்று வந்ததனை மறைத்துக்கொண்டு
பொய் கூறுகின்ற அளவுக்குத் தாழ்ந்து போகின்ற நிலையினைக்
காணுகின்றோம். 
 

(49)
 

9296. 

'மூது உணர்ந்த இம் முது மகன் கூறிய முயற்சி 

சீதை என்பவள்தனை விட்டு, அம் மனிதரைச் 

சேர்தல்;