பக்கம் எண் :

640யுத்த காண்டம் 

10356.

பத வலிச் சதங்கைப் பைந் தார்ப் பாய் பரி, பணைத்

திண் கோட்டு

மதவலிச் சைலம், பொன் பூண், மா மணிக்கோவை,

மற்றும்

உதவலின் தகைவ அன்றி, இல்லன உள்ள எல்லாம்

சதவலிதனக்குத் தந்தான் - சதுமுகத்தவனைத்

தந்தான்.

 

சதுமுகத் தவனைத் தந்தான் - நான்முகனைப் பெற்றவனாகிய
திருமாலாகிய இராமன்;   சதவலி தனக்கு-    சதவலி என்னும்
பெயருடைய வானர சேனைத் தலைவனுக்கு; பதவலிச் சதங்கைப்
பைந்தார் பாய்பரி
- வலிமையான பதத்திலே சதங்கை அணிந்த
பசிய கிண்கிணி மாலையுடைய   பாயும்   குதிரை; பணைத்தின்
கோட்டு மதவலிச் சைலம்
- பருத்த வலிய தந்தங்களை உடைய
மதமிக்க மலையாகிய யானை; பொன் பூண், மாமணிக் கோவை
மற்றும் உதவலின் தகைவ இன்றி இல்லன
- கொடுப்பதற்குத்
தடை ஏதும் இல்லாமல்;உள்ள எல்லாம்- உள்ள எல்லாவற்றையும்;
தந்தான் -.
 

(25)
 

10357.

'பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை; இதனுக்கு

ஈதுக்

கோ, சரி இலது' என்று எண்ணும் ஒளி மணிப்

பூணும், தூசும்,

மூசு அரிக்கு உவமை மும்மை மும்மதக் களிறும்,

மாவும்,

கேசரிதனக்குத் தந்தான் - கிளர் மணி முழவுத்

தோளான்.

 

கிளர் மணி முழவுத் தோளான்- மிக்குவிளங்கும் ஆழகிய
முழவு போன்ற தோள் உடைய இராமன்; கேசரி தனக்கு - அனுமன்
தந்தையாகிய கேசரிக்கு; பெருவிலை ஒருவர்க்கேயும் இதனுக்குப்
பேச அரிது
- மிக்க விலையை    ஒருவராலும் இதனுக்குப் பேச
முடியாது; ஈதுக்கோ சரி இலது -    இதற்கொப்பான   பொருள்
இல்லை; என்று எண்ணும் ஒளி மணிப் பூணும் தூசும்- என்று
மதிப்பிடப்படும் ஒளி படைத்த மணி ஆபரணமும் பட்டாடையும்;
மூசு அரிக்கு மும்மை உவமை மும்மதக் களிறும் -