உலகெங்கும் பரவும் வடவைத் தீக்கு மூன்று மடங்கு உவமையாகக் கூடிய மும்மத யானையும்; மாவும்- குதிரையும்; தந்தான் - |
(26) |
10358. | வளன் அணி கலனும் தூசும், மா மதக் களிறும், |
| மாவும், |
| நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், |
| மற்றோர் |
| உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் |
| ஈந்தான் - |
| களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே. |
|
களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோன்- நெற்களங்கள் நிரம்பியுள்ள தாமரைப் பூ வேலியை உடைய கோசல நாட்டரசனாய இராமன்;நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர் உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் - ; வளன் அணி கலனும் தூசும் மாமதக் களிறும் மாவும் - உலப்பில பிறவும் - கணக்கில்லாத மற்றைப் பொருள்களையும்; ஈந்தான்-. |
(27) |
10359. | அவ் வகை அறு பத்து ஏழு கோடியாம் அரியின் |
| வேந்தர்க்கு |
| எவ் வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறி, |
| பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் |
| பார்மேல் |
| கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன், |
| கடைக் கண் நோக்கம். |
|
(இராமன்) அவ்வகை- அவ்வாறு; அறுபத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு - அறுபத்தேழு கோடி என்னும் கணக்கினை உடைய குரங்கு அரசர்களுக்கு; எவ்வகைத் திறனும் நல்கி - எல்லாவகைப் பட்ட பொருளும் கொடுத்து; இனியன பிறவும் கூறி - பிரிய வசனங்களையும் சொல்லி; பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம்- கடல் நீரைப் போல வற்றாது உலகில் பெருகும் எழுபது வெள்ளம் குரங்குகள்; பார்மேல் - உலகில்; கவ்வை அற்று இனிது வாழ- துன்பமின்றி; நன்றாக வாழும்படி; கடைக்கண் நோக்கம்- தனது கடைக்கண் பார்வையாகிய திருவருளைக:் கொடுத்தனன் - கொடுத்தான். |
(28) |