பக்கம் எண் :

642யுத்த காண்டம் 

10360.

மின்னை ஏர் மௌலிச் செங் கண் வீடணப் புலவர்

கோமான் -

தன்னையே இனிது நோக்கி, 'சராசரம் சுமந்த

சால்பின்

நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர், உளரேல்;

ஐய!

பொன்னையே இரும்பு நேரும்ஆயினும் பொரு அன்று'

என்றான்.

 

(இராமன்) - மின்னை ஏர் மௌலிச் செங்கண் வீடணப்
புலவர் கோமான் தன்னையே இனிது நோக்கி
- மின்னலை ஒத்த
கிரீடத்தை அணிந்த சிவந்த கண்களை உடைய வீடணன் என்னும்
அறிஞர்க்கரசனை     அன்பொழுகப் பார்த்து;'ஐய!   சராசரம்
சுமந்த சால்பின்
- ஐயனே!        உலகமுழுதும்    தாங்கிய
சான்றாண்மையை உடைய; நின்னையே ஒப்பார் நின்னை அலது
இலர்
- உன்னைப் போன்றவர்கள் நீயே அல்லாமல்     வேறு
யாரும் இலர்;உளரேல் - அப்படி இருப்பதாகக் கூறினால் (அது
எவ்வாறாகும் எனின்); பொன்னையே இரும்பு நேரும் ஆயினும்
பொரு அன்று என்றான்
- பொன்னை   ஒருகாலத்து இரும்பு
ஒத்துவிடும் ஆனாலும் உனக்கு ஒப்பல்ல என்றான்.
 

(29)
 

10361.

என்று உரைத்து, அமரர் ஈந்த எரி மணிக்

கடகத்தோடு

வன் திறல் களிறும், தேரும், வாசியும், மணிப்

பொன் பூணும்,

பொன் திணி தூசும், வாசக் கலவையும், புது மென்

சாந்தும்,

நன்று உற, அவனுக்கு ஈந்தான் - நாகணைத்

துயிலைத் தீர்ந்தான்.

 

நாகணைத் துயிலை தீர்ந்தான் - பாம்பணைத் துயிலை நீங்கி
அவதரித்த இராமன்; என்று உரைத்து- என்று    வீடணனைப்
பாராட்டிக் கூறி; அவனுக்கு-   அந்த வீடணனுக்கு;  நன்று உற-
நன்மை பொருந்த; அமரர் ஈந்த   எரிமணிக்   கடகத்தோடு-
தேவர்கள் கொடுத்த ஒளிவீசும் மணிகள் அழுத்திய கடகத்தோடு;
வன்திறல்