பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்643

களிறும் தேரும் வாசியும் மணிப்பொன் பூணும் பொன்திணி
தூசும் வாசக் கலவையும் புதுமென் சாந்தும் - ; ஈந்தான்
-.
 

(30)
 

10362.

சிருங்கபேரம்அது என்று ஓதும் செழு நகருக்கு

இறையை நோக்கி,

'மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு

துணைவற்கு?' என்னா,

கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும்,

பூணும்,

ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும்

மன்னோ.

 

(இராமன்) சிருங்க பேரம் அது என்று ஓதும் செழுநகர்க்கு
இறையை நோக்கி
- குகனைப் பார்த்து; 'மறு அறு துணைவற்கு
மருங்கு இனி உரைப்பது என்னோ?'; என்னா-      குற்றமற்ற
சகோதரனாய உனக்கு இப்போது சொல்ல வேண்டியது யாது உள்ளது
என்று சொல்லி; கருங்கை மாக்களிறும் மாவும் கனகமும் தூசும்
பூணும் -; ஒருங்குற உதவி
-    சேரக்     கொடுத்து;பின்னர்
விடையும் உதவினன்
- பிறகு ஊர் செல்ல உத்தரவும் கொடுத்தான்.
மன், ஓ - அசைகள்.
 

(31)
 

10363.

அனுமனை, வாலி, சேயை, சாம்பனை, அருக்கன்

தந்த

கனை கழல் காலினானை, கருணை அம் கடலும்

நோக்கி,

'நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர்

வைப்பும்

எனது; அது காவற்கு இன்று என் ஏவலின் ஏகும்'

என்றான்.

 

கருணை அம்கடலும்- அருட்கடலாய் விளங்கும் இராமபிரானும்;
அனுமனை வாலிசேயை சாம்பனை அருக்கன் தந்த கனைகழல்
காலினானை; நோக்கி
- பார்த்து; 'நும்மை    பிரிக என்றல்
நினைவதற்கு அரிது
- உங்களைப் பிரிந்து செல்க என்று கூறுதல்
கூற நினைப்பதற்கே முடியாத செயல் ஆகும் (ஆனாலும்); நீவிர்
வைப்பும் எனது
- உங்கள் நாடுகளும் தற்போது என்னுடையதே