பக்கம் எண் :

644யுத்த காண்டம் 

அல்லவா (ஆதலின்);அது காவற்கு - அந் நாடுகளைக்
காப்பதற்கு; இன்று என் ஏவலின் ஏகும்- இன்று என்
கட்டளையை மேற்கொண்டு செல்லுங்கள்;என்றான்-.
 

(32)
 

10364.

இலங்கை வேந்தனுக்கும் இவ்வாறு இனியன யாவும்

கூறி,

அலங்கல் வேல் மதுகை அண்ணல்

விடைகொடுத்தருளலோடும்,

நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நலன் உறும்

நெஞ்சர், பின்னர்க்

கலங்கலர், 'ஏய செய்தல் கடன்' எனக் கருதிச்

சூழ்ந்தார்.

 

இலங்கை வேந்தனுக்கும்- வீடணனுக்கும்; இனியன யாவும்
இவ்வாறு கூறி
- பிரிய    வார்த்தைகளை இவ்வாறே   சொல்லி;
அலங்கல் வேல் மதுகை அண்ணல்-மாலையணிந்த வேலினையுடைய;
வலிமிக்க   இராமபிரான்;  விடை கொடுத்தருளலோடும் - உத்திரவு
கொடுத்துப் புறப்படச் சொல்லிய அளவில்; நலம்கொள் பேருணர்வின்
மிக்கோர்
- நன்மை கொண்ட மெய்யுணர்வால் சிறந்த அவர்கள்; நலன்
உறும் நெஞ்சர்
- ஆறுதல் அடைந்த மனம் உடையராய்; பின்னர்க்
கலங்கலர்
- பிறகு தடுமாற்றம் அடையாதவராய்; 'ஏய செய்தல் கடன்'-
இராமபிரான் ஏவிய பணியைச் செய்தல் தமக்குரிய கடமை; எனக்
கருதிச் சூழ்ந்தார்
- என்று கருதிப் புறப்பட முடிவு செய்தார்கள்.
 

(33)
 

10365.

பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு

ஆர்

விரத மா தவனை, தாயர் மூவரை, மிதிலைப்

பொன்னை,

வரதனை, வலம்கொண்டு ஏத்தி, வணங்கினர்

விடையும் கொண்டே,

சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியைச்

சார்ந்தார்.

 

சரதமா நெறியும் வல்லோர்- என்றும் நிச்சயமான பரமபத
நெறிக்கும் வல்லோராகிய அவர்கள்; பரதனை இளைய கோவை