சத்துருக்கனனை பண்பு ஆர் விரத மாதவனை தாயர் மூவரை மிதிலைப் பொன்னை வரதனை - வலம் கொண்டு ஏத்தி - சுற்றி வந்து தோத்தரித்து; வணங்கினர் விடையும் கொண்டு- வணங்கி விடை பெற்று; தத்தம பதியைச் சார்ந்தார்- தங்கள் தங்கள் நகரங்களை அடைந்தார்கள். |
இராமனை முதலாகக் கொண்டு பரதனைச் சந்தித்த அவர்கள் விடைபெறும் போது பரதனை முதலாக இராமனாகிய வரதனை இறுதியாக வலம் கொண்டு ஏத்திச் சென்றதாகக் கூறியது ஓர் நயம். தத்தமபதி - சிருங்க பேரம், கிட்கிந்தை, இலங்கை என்று அவரவர் நகரம். |
(34) |
10366. | குகனைத் தன் பதியின் உய்த்து, குன்றினை வலம் |
| செய் தேரோன் |
| மகனைத் தன் புரத்தில் விட்டு, வாள் எயிற்று |
| அரக்கர் சூழ, |
| ககனத்தின்மிசையே ஏகி, கனை கடல் இலங்கை |
| புக்கான், - |
| அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், |
| சென்று, அன்றே. |
|
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன்- நெஞ்சார்ந்த அன்புடைய பெரியோனாகிய மாலை அணிந்த வீடணன்; வாள் எயிற்று அரக்கர் சூழ - கூரிய பல்லினை உடைய அரக்கர்கள் தன்னைச் சுற்ற; ககனத்தின் மிசையே ஏகி - (புட்பக விமானத்தில் அனைவரையும் அழைத்துக் கொண்டு; ஆகாய வழியாகச் சென்று. குகனைத் தன் பதியின் உய்த்து- குகனை அவன் நகராகிய சிருங்க பேரத்தில் கொண்டு விட்டு; குன்றினை வலம் செய் தேரோன் மகனை- மகாமேரு மலையைச் சுற்றி வரும் தேரினையுடைய சூரியன் மகனாகிய சுக்கிரீவனை; தன்புரத்தில் விட்டு - அவன் நகராகிய கிட்கிந்தையில் கொண்டுவிட்டு; அன்றே சென்று - அன்றைக்கே போய்; இலங்கை புக்கான்- இலங்காபுரியைச் சென்றடைந்தான். |
'சென்று புக்கான்' என இயைத்து, அன்றே அசை எனினும் ஆம். |
(35) |