இராமன் இனிது அரசாட்சி நடத்தல் |
10367. | அய்யனும் அவரை நீக்கி, அருள் செறி |
| துணைவரோடும் |
| வய்யகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் |
| செல்ல, |
| செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும் |
| நய்யுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் |
| தீர்த்தே. |
|
அய்யனும்- இராமபிரானும்; அவரை நீக்கி - அவர்களை அனுப்பிய பிறகு; அருள் செறி துணைவரோடும் - தன்னருள் நிரம்பிய பரத இலக்குவ சத்துருக்கனர்களோடும் கூடி; வய்யகம் முழுதும் - உலகம் முழுவதும்; செங்கோல் மனு நெறி முறையில் செல்ல - தன் அரசாட்சியாகிய செங்கோல் நீதி நெறிமுறைப்படி நடவா நிற்ப; செய்ய மாமகளும்- திருமகளும்; மற்றச் செகதல மகளும் - பூமகளும்; சற்றும் நையுமாறு இன்று- சிறிதும் வருத்தமுறாமல்; நானிலப் பொறைகள் தீர்த்து-பூமியின் சுமைகளை நீக்கி, காத்தான் - |
திருமகளுக்கு வருத்தம் தீயோரைச் சார்தல். பூமகளுக்கு வருத்தம் பிணி பகை மிகுதல் - நிலப் பொறை தீர்த்தல் - வசீகரமும் வளமும் மிகப் பெற மழை அளவுபடப் பெறுதலாகும். இராம ராஜ்யம் இவ்வாறு இருந்தது என்றதாம். |
(36) |
10368. | உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும், |
| 'எம் பெருமான்!' என்று ஏத்தி, இறைஞ்சி நின்று, |
| ஏவல் செய்ய, |
| தம்பியரோடும், தானும், தருமமும், தரணி |
| காத்தான் - |
| அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த |
| வள்ளல். |
|
அம்பரத்து - திருப்பாற்கடலில்; அனந்தர் நீங்கி - அறிதுயிலிலிருந்து விலகி; அயோத்தியில் வந்த வள்ளல் - அயோத்தியில் ஸ்ரீராமனாக அவதரித்து பலர்க்கும் அருள் செய்த இராமபிரான்; உம்பரோடு இம்பர் காறும் - தேவர் முதல் மக்கள் வரை; உலகம் ஓர் ஏழும் ஏழும் - பதினான்கு உலகங்களும்; |