பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்647

'எம்பெருமான்' என்று ஏத்தி - எம்பெருமான் என்று துதித்து;
இறைஞ்சி நின்று ஏவல் செய்ய- வணங்கி   நின்று    தன்
கட்டளையை நிறைவேற்ற;தம்பியரோடும் தானும் தருமமும்-
தம்பியர்களோடும் தானும் அறக்கடவுளும் ஒன்றாக நின்று;
தரணி காத்தான் - இந்த உலகம் முழுவதையும் பாதுகாத்தான்.
 

(37)