| ஆதியின்தலை செயத்தக்கது; இனிச் செயல் |
| அழிவால், |
| காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும்? |
|
மூது உணர்ந்த இம்முதுமகன் கூறிய முயற்சி - பழையனவற்றை உணர்ந்த இம்முதியவன் மாலியவான் கூறிய முயற்சிப்பயன்; சீதை என்பவன் தனைவிட்டு அம்மனிதரைச் சேர்தல் - சீதை என்பவளைச் சிறையிலிருந்து விடுத்து அம்மனிதரைச் சேர்வது என்பதாகும்; ஆதியின் தலை செயத்தக்கது- அது, முன்னமே தொடக்கத்தில் செய்யத்தக்க செயல் ஆகும்; காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும், இனிச் செயல் அழிவால் - அன்பிற்குரிய இந்திரசித்தினையும் பகைவர் கொல்லக்கண்டும் இனி அவ்வாறு செய்வது நமது புகழுக்கு இழிவாகும். |
'மாலியவான் வெளிப்படையாகச் சீதையை விட்டுவிடலாமெனக் கூறவில்லையாயினும் அவன் சொன்னதைக் கொண்டு அதன் பின்னணியாகிய அவன் கருத்தை உணர்ந்த வன்னி, அக்கருத்தின்படி சீதையை விட்டுவிட்டுச் சமாதானமாகப் போதல் என்பது தொடக்கத்திலேயே செய்ய வேண்டியசெயலாம். அங்ஙனம் செய்திருப்பின் கும்பகன்னன், அதிகாயன் முதலான வீரர்களும், அரக்கர் படையும் அழிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அன்பிற்கினிய இந்திர சித்துவும் பகைவர்களால் கொல்லப்பட்ட நிலையில் அப்படிச் செய்வது அரக்கர் குலம் இதுவரையும் தேடிய வீரப்பண்பாகிய பெருமைக்கு அழிவைத் தருவதாகும் என்றான். |
(50) |
9297. | 'விட்டம்ஆயினும் மாதினை, வெஞ் சமம் விரும்பிப் |
| பட்ட வீரரைப் பெறுகிலெம்; பெறுவது பழியால்; |
| முட்டி, மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால், |
| கட்டம், அத் தொழில்; செருத் தொழில் இனிச் |
| செயும் கடமை' |
|
மாதினை விட்டம் ஆயினும் வெஞ்சமம் விரும்பி- சீதையை விட்டு விட்டோம் எனினும், கொடிய போரை விரும்பிச் சென்று; பட்ட வீரரைப் பெறுகிலம், பெறுவது பழியால் - இறந்துபட்ட வீரர்களைத் திரும்பப் பெறமாட்டோம், அது மட்டுமின்றிப் பெறப்போவது பழியேயாகும்; முட்டி, மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால் - பகைவரைத் தாக்கி, அவர்களை முற்றும் |