பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்651

தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று

அடக்கும்

தானம் மேவினர்க்கு இவர் ஒரு பொருள் எனத்

தகுமோ?

(26-1)
 
915.

'நின்று காண்குதிர், இறைப் பொழுது; இங்கு நீர்

வெருவல்;

இன்று இராகவன் பகழி மற்று இராக்கதப் புணரி
கொன்று வற்றிடக் குறைத்து உயிர் குடிக்கும்' என்று

அமரர்க்கு

அன்று முக்கனான் உரைத்தல் கேட்டு, அவர் உளம்

தெளிந்தார்.

(26-2)
 
916.

வானின் மேவிய அமரருக்கு இத் துணை மறுக்கம்
ஆனபோது, இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள்
ஈனம் எய்தியது இயம்பல் என்? எழுபது வெள்ளத்
தானை ஆகிய கவிப் படை சலித்தது, பெரிதால்.

(26-3)
 
917.

வாய் உலர்ந்தன சில சில; வயிறு எரி தவழ்வுற்று
ஓய்தல் உந்தின சில சில; ஓடின நடுங்கிச்
சாய்தல் உந்தின சில சில; தாழ் கடற்கு இடையே
பாய்தல் உந்தின சில சில - படர் கவிப் படைகள்.

(29-1)
 
918.

அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர்
தனுவின் ஆற்றலும், தங்களைத் தாங்குவர் தாங்கார்,
'கனியும் காய்களும் உணவு உளோ; மலை உள

காக்க

மனிதர் ஆளில் என், இராக்கதர் ஆளில் என்,

வையம்?'

(44-1)
 
919.

என்று, சாம்பவன் முதலிய தலைவர்கள் இயம்ப,
குன்று உலாம் புயத்து அங்கதன் குறுநகை புரிந்தே,