928. | துடி, தவண்டை, சங்கு, பேரி, துந்துமிக் குலங்கள், | |
கைத் |
தடி, துவண்ட ஞாண், இரங்கு தக்கையோடு பம்பை, |
மற்று |
இடி பொதிந்த முரசம் ஆதி எண் இல் பல்லியக் |
குழாம் |
படி நடுங்கவே, பகைக் களத்தின் ஓசை விஞ்சவே. |
| | (83-3) |
|
929. | இரைத்து அடர்ந்து அரக்கர் வெள்ளம், எண் இல் | |
கோடி, இடைவிடாது |
உருத்தல் கண்டு, இராகவன் புன்முறுவல் கொண்டு, |
ஒவ்வொருவருக்கு |
ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ, சரத்தின் மாரி பெய்து, அரக்கர் தலை தரைக்கண் |
வீழ்த்தினான். | (83-4) |
|
930. | 'நுனித்திடத்திற்கு அருங் கடுப்பின் நொடிவரைக்குள் | |
எங்குமாய்க் |
குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து |
கோறலால், |
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று |
நன்று' எனா, |
வினைத் திறத்து அரக்கர் விம்மிதத்தர் ஆய், | |
விளம்புவார். | (83-5) |
|
931. | 'விண்ணின்மீது அனந்த கோடி வீரன்' என்பர்; 'அல்ல | |
இம் |
மண்ணின்மீது அனந்த கோடி மனிதன்' என்பர்; |
அல்ல வெங் |
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன்' என்பர்; |
'அல்ல உம் |
எண்ணமீது அனந்த கோடி உண்டு, இராமன்' |
| என்பரால். | (83-6) |