பக்கம் எண் :

656யுத்த காண்டம் 

படுமாறு அயல் வரு தீயவர் பல கோடியர் பலரும்
சுடர் ஏறிய படை மாரிகள் சொரிந்தார், புடை

வளைந்தார்.

(101-1)
 
937.

கோல் பொத்திய நெடு நாணினில் கோமான் தொடை

நெகிழ

மேல் பொத்திய நிருதக் குலம் வேரொடு உடன்

விளிய,

தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று

உடன் மடிய,

கால் பொத்திய கை ஒத்தன, காகுத்தன் வெங்

கணையால்.

(102-1)
 
938.

அது போது அகல் வானில் மறைந்து, அரு மாயை

செய் அரக்கர்,

எது போதினும் அழிவு அற்றவர், இருள் வான் உற

மூடி,

சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும்

நிறைத்தார்;

சது மா மறை அமலன் அவை தடிந்தான், தழற்

படையால்.

(108-1)
 
939.

அமலன் விடும் அனல் வெம் படை அடு வெம்

பொறி சிதறி

திமிலம்கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும்
பிமரம் கெட, அவர்தம் உடல் பிளவுண்டு உயிர்

அழிய,

சமரம் புகும் அளவு இல்லவர்தமை வென்றது, ஓர்

நொடியின்.

(108-2)
 
940.

காலாள் எனும் நிருதப் படை வெள்ளம்

கடைகணித்தற்கு

ஏலாதன பல கோடிகள் இமையோர் கரை காணார்;
பாலாழியின் மிசையே துயில் பரமன் சிலை பொழியும்
கோலால் அவர் குறைவுற்றனர்; குறையாதவர்

கொதித்தார்.

(112-1)