941. | கொதித்தார் எழு கடல்போல் வளைவுற்றார்; கொடு | |
முசலம் |
குதித்து ஓடிய சிலை வாளிகள், கூர் வேல், கதை, |
குலிசம். |
விதைத்தார், பொரும் அமலன்மிசை வெய்தே; பல |
உயிரும் |
விதித்தானையும் விதித்தான் சிலை வளைத்தே, சரம் |
விதைத்தான். | (112-2) |
|
942. | கொள்ளை வெஞ் சமர் கோலும் இராக்கத வெள்ளமும் குறைவுற்றது; மேடொடு பள்ளம் இன்றிப் படும் குருதிக் கடல் உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால். | |
(127-1) |
|
943. | தேயம் எங்கும் இடம் சிறிது இன்றியே, மாய வஞ்சர் மடிய, பிண மலை போய் வளர்ந்து விசும்பொடும் புல்லிற்றால்; ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே. | |
(127-2) |
|
944. | கடல் எரிக்க கனற் படை கார்முகத்து - இடை தொடுத்து, அதை ஏவி, 'இரும் பிணத் திடல் அனைத்தையும் தீர்க்க' எனச் செப்பினான்; பொடி - படுத்தி இமைப்பில் புகுந்ததால். | |
(127-3) |
|
945. | அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு உண்டு எனற்கு அரிது என்? உளது இச் செயல். எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால். | |
(127-4) |
|
946. | இற்றது ஆக இராக்கத வீரர்கள் உற்று, ஓர் ஆயிர வெள்ளம் உடன்று, எதிர் சுற்றினார், படை மாரி சொரிந்துளார்; வெற்றி வீரனும் கை வில் வணக்கினான். | |
(127-5) |
| | |
947. | தலை அறுந்தவரும், தடத் திண் புய மலை அறுந்தவரும், வயக் கையொடு | |