| சிலை அறுந்தவரும், திமிரத்தின் மெய்ந் நிலை அறுந்தவரும், அன்றி, நின்றது ஆர்? | | (127-6) | | 948. | தேர் அளப்பு இல பட்ட; சிறு கண் மாக் கார் அளப்பு இல பட்ட; கடும் பரித் தார் அளப்பு இல பட்ட; தடம் புயப் பேர் அளப்பு இலர் பட்டனர், பீடு இலார். | (127-7) | | 949. | வானகத்தோடு மா நிலம், எண் திசை ஆன திக்கு ஒரு பத்தும், அடுத்துறத் தான் நெருக்கிய வஞ்சகர்தம் தலை, போன திக்கு அறியாது, புரட்டினான். | (127-8) | | 950. | சுடரும் வேல், கணை, தோமரம், சக்கரம் அடரும் மூஇலைச் சூலம், மற்று ஆதியாம் படையின் மாரி பதகர் சொரிந்து, இடை தொடர, வீரன் துணித்தனன் வாளியால். | (127-9) | | 951. | ஏனமோடு, எண்கு, சீயம், எழு மத யானை, ஆளி, புலி என்று இவை முகம் ஆன தீய அரக்கர் மடிந்திட, வானவன் கணை மாரி வழங்கினான். | (127-10) | | 952. | வடி சுடர்க் கணை மாற்ற, அங்கு ஆயிர முடியுடைத் தலையோர் தலையும் முடிந்து இடுவது இத் தலத்தே, இடி ஏற்றில் வான் வட வரைச் சிகரங்கள் மறிவபோல். | (127-11) | | 953. | இரதம், யானை, இவுளியோடு எண் இலா நிருதர் வெள்ளம் நெடு நிலத்து இற்றிட, சரதம் அன்னை சொல் தாங்கி, தவத்து உறும் விரத வீரன் தன் வாளியின் வீட்டினான். | (127-12) | | | | 954. | கடு வைத்து ஆர் களன் கைப் படு கார்முகம் ஒடியத் தாக்கும் ஒருவன் சிலையின்வாய், வடவைத் தீச் சொரி வாளியின் மா மழை பட, மற்று ஆயிர வெள்ளமும் பட்டதால். | (127-13) |
|
|
|