பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்659

955.

பால் ஒத்து ஆழியில் பாம்பு - அணைமேல் துயில்
சீலத்தான், இமையோர் செய் தவத்தினின்
ஞாலத்து ஆய இறைவன், இராவணன்
மூலத் தானை முடிய முருக்கினான்.

(127-14)
 
956.

ஈது அவர் சொல, கயிலை ஈசனும் நகைத்து,

இமையவர்க்கும் ஒளி வான்

ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல்

கடவுள் யாமும் உணராப்

பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல்

செய்யாது, பெருமான்

நீத உருவம் கொளும் இராமன் எனவே சுருதி

நின்ற மொழி பொன்றி விடுமோ?

(149-1)
 
957.

பாறு படர் பகழி மாரி நிரைகள் பட,
நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர,
வேறு படர அடர் விரவு சுடர் வலையம்,
மாறுபட, உலகின் மலைகள் அளறுபட,

(154-1)
 
958.

திரிய அலகு இல் மலை, திரிய இரு சுடர்கள்
திரிய ஒருவன், எதிர் சின விலொடும் அடர
வரி கை ஒரு களிறு திரிய, விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் இடை திரிய.

(163-1)
 
959.

கரிய திலத மலை திரிய, வளி சுடர்கள்
இரிய, ஒரு விலுடை இரு கை ஒரு களிறு
திரிய, விடு குயவர் திரிகை என உலகு
தெரிய, எழு கடலும் முழுதும் முறை திரிய.

(164-1)
 
960.

ஆய வல் அரக்கர், மற்று அளவு இல்லாதவர்,
தீ எழும் விழியினர், சினம் கொள் சிந்தையர்
காயும் வெம் படையினர், கடலின் பொங்கியே
மேயினர், தம்தமில் இவை விளம்புவார்.

(170-1)
 
961.

'அன்றியும் ஒருவன், இங்கு அமரில், நம் படை
என்று உள கரி, பரி, இரதம், ஈறு இல் போர்