| வென்றிடும் பதாதியர், அனந்த வெள்ளமும் கொன்றனன், கொதித்து, ஒரு கடிகை ஏழினே. | (171-1) |
|
962. | இவ் உரை வன்னி அங்கு இயம்ப. 'ஈதுபோல் செவ் உரை வேறு இலை' என்று, தீயவர் அவ் உரைக்கு அனைவரும் அமைந்து, அங்கு | (177-1) |
அண்ணலோடு |
எவ் உரையும் விடுத்து, அமரின் ஏற்றுவார். |
|
963. | இன்னவர் ஐ - இரு கோடி என்று உள மன்னவர் சதமுகம் உடையர்; மற்று அவர் துன்னினர், மனத்து அனல் கறுக்கொண்டு ஏறிட உன்னினர், ஒருவருக்கு ஒருவர் ஓதுவார். | (184-1) |
|
964. | அடல் ஐ - இரு கோடி அரக்கர் எனும் மிடல் மன்னவர் வீரனொடும் பொருவார்; கடை கண்டிலர், காய் கரி, தேர், பரிமாப் படை கண்டிலர்; கண்டிலர், பட்ட திறம். | (206-1) |
|
965. | அங்கு அங்கு அவர்தம்மொடும் ஐயன் உயிர்க்கு அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு, எங்கு இங்கும் இராமன் இராமன் எனா, எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால். | (212-1) |
|
966. | ஏயும் ஐ - இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர் | (213-1) |
சேனை |
ஆயிர வெள்ளம்தானும் அத் துணை வெள்ளம் ஆகி, தூயவன் அவர்தம் சேனை தொலைத்தபின், இறைவர் |
ஆவி |
போய் அறப் பகழி மாரி பொழிந்தனன், பொன்றி |
வீழ்ந்தான். |
|
967. | இட்டதோர் பேயரின் ஈர் - ஐயாயிரம் பட்டபோது, ஆடும் ஓர் படு குறைத்தலை சுட்ட நூறாயிரம் கவந்தம் ஆடிடத் தொட்டனன், சிலை அணி மணி நுணுக்கென. | (220-1) |