பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்661

968.

மாத்திரைப் போதினில், மணி தொனித்திட,
போர்த் தொழில் அரக்கர்மேல் பொருத பூசலில்,
ஏத்திடை இடைவிடாது ஏழு நாழிகை
கீர்த்தியன் சிலை மணி கிணிகிணென்றதே.

(220-20)
 
969.

மொய்த்தனர், நூறு வெள்ள முரண் படைத்தலைவர்

(222-1)

கூட்டம்,

பத்து நூறு ஆய வெள்ளப் படையொடு மாயை பற்றி,
ஒத்த யோசனை நூறு என்ன ஓதிய வரைப்பின்

ஓங்கி,

பத்து எனும் திசையும் மூடி, சொரிந்தனர் படையின்

மாரி.

 
970.

யோசனை நூற்றின் வட்டம் இடையறாது உற்ற

(222-2)

சேனைத்

தூசி வந்து, அண்ணல்தன்னைப் போக்கு அற

வளைத்துச் சுற்றி,

வீசின படையும் அம்பும் மிடைதலின், விண்ணோர்

யாக்கை

கூசினர், பொடியர் என்றும் குமிழ்த்தனர், ஓமக்

கூடம்.

 
971.

முன்னவன் அதனை நோக்கி, முறுவலித்து, அவர்கள்

(222-3)

ஏவும்

பல் நெடும் பருவ மாரிப் படை எலாம் பொடிபட்டு

ஓட,

தன் நெடுஞ் சிலையின் மாரிதனக்கு எழு முகிலும்

அஞ்சத்

துன்னுவித்து, அரக்கர் சேனையைத் தொலைத்தல்

செய்தான்.

 
972.

கால வெங் கனலின் மாயக் கடும் படை சிலையின்

பூட்டி,

மேலவன் விடுதலோடும், வெம் படை அரக்கர்

வெள்ளம்