| நாலும் மூ-இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் | (222-4) |
நண்ணி, |
தாலமேல் படுத்து மீண்டது, அவன் சரம் தலைவர்த் |
தள்ளி. |
|
| 973. | முடிந்தது மூலத்தானை; மூவுலகு இருண்ட தீமை விடிந்தது; மேலை வானோர் வெந் துயர் | (222-5) |
அவரினோடும் |
பொடிந்தது; புனிதன் வாளி போக்கு உறப் பொய்யர் |
ஆவி |
படிந்தது, ககனம் எங்கும்; பலித்தது, தரும் அன்றே. |
|
| 974. | 'ஈது ஒரு விளையாட்டு; அன்பின், இத்துணை | (222-6) |
தாழ்த்தான், ஐயன்; |
எது அவன் துணியின் இப்பால்? நீசர் ஓர் |
பொருளோ? இன்னும் |
போதுமோ? புவன கோடி போதினும், கணத்தில் |
பொன்றிப் |
போதும்' என்று, அயனோடு ஈசன் அமரர்க்குப் |
புகன்று நின்றான். |
|
| 975. | சேனை அம் தலைவர், சேனை முழுவதும் அழிந்து | (222-7) |
சிந்த, |
தான் எரி கனலின் பொங்கி, தரிப்பு இலர், கடலின் |
சூழ்ந்தே |
வானகம் மறைய, தம் தம் படைக் கல மாரி பெய்தார் ஆனவை முழுதும் சிந்த அறுத்தனன், அமலன் |
அம்பால். |
| | |
| 976. | பகிரண்டப் பரப்பில் நின்ற பல பல கோடி வெள்ளத் தொகை மீண்டும் அரக்கர் யாரும் துஞ்சினர், கருவும் | (225-1) |
துஞ்ச; |
செகம் உண்ட ஒருவன் செங் கைச் சிலையுறு |
மணியின் ஓசை |
புக, அண்டம் முழுதும் பாலின் பிரை எனப் |
பொலிந்தது அன்றே. |