பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்663

977.

நணியனாய்த் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த

வஞ்சர்

அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து

இறந்த காலக்

கணிதம் ஏழரையே கொண்ட கடிகை; அக்

கடிகைவாய் வில்

மணிஒலி எழும்ப, வானோர் வழுத்திட, வள்ளல்

நின்றான்.

(225-2)
 

31. வேல் ஏற்ற படலம்

 
978.

அரக்கர் சேனை ஓராயிர வெள்ளத்தை, 'அமரில்

துரக்க, மானுடர்தம்மை' என்று, ஒருபுடை துரந்து,

வெருக் கொள் வானரச் சேனைமேல் தான்

செல்வான் விரும்பி

இருக்கும் தேரொடும் இராவணன் கதுமென

எழுந்தான்.

(2-1)
 

32. வானரர் களம் காண் படலம்

 
979.

என்று உரைத்து, 'உயர் வான் பிறப்பு எய்திய

வென்றி வெஞ் சின வேழங்கள்தம்மொடும்

துன்று வாசித் தொகைகளும் கேண்ம்' எனா,

நின்ற வீடணன்தானும் நிகழ்த்துவான்.

(27-1)
 

33. இராவணன் களம் காண் படலம்

 
980.

அலக்கண் எய்தி அமரர் அழிந்திட,

உலக்க வானர வீரரை ஒட்டி, அவ்

இலக்குவன்தனை வீட்டி, இராவணன்

துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே.

 

(இப்பாடல் இந்தப் படலத்தின் முதற் செய்யுளாக உள்ளது.)