பக்கம் எண் :

666யுத்த காண்டம் 

எங்கணும் கவந்தம் ஆட, எய்தி அங்கு

(17-2)

அரக்கிமார்கள்,

தங்கள்தம் கணவர்ப் பற்றி, தம் உடல் தாங்கள்

நீத்தார்.

 

990.

எழும் படை வெள்ளம் எல்லாம், இரண்டு கை கடிகை

(17-3)

தன்னில் ஆங்கு

களம் பட, கமலக்கண்ணன் கடுங் கனல் பகழி மாரி
வளம் படச் சிலையில் கோலி, பொழிந்து, அவை

மடித்தான்; கண்டு,

உளம் கனல் கொளுந்த, தேரின் உருத்து, எதிர்,

அரக்கன் வந்தான்.

 
991.

மூஉலகு அடங்கலும் மூடும் அண்டமேல்
தாவினன் தேரொடும், அரக்கன்; தாவியே,
கூவினன்; அங்கு அறைகூவ, கொண்டலும்
மேவினன், அரக்கனை விடாது பற்றியே.

(71-1)
 
992.

அண்டம் ஓராயிர கோடி எங்கணும்
மண்டினர், செருத் தொழில் மலைதல் விட்டிலர்
அண்டர்கள் கலங்கினர்; அரக்கராயுளோர்
உண்டு, இனிக் கரு' என ஓதற்கு இல்லையால்.

(71-2)
 
993.

உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது,
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது,
இமையவர் அடல் வலி பருகியது, எளிமையின்.

(89-1)
 
994.

ஆசுரப் பெரும் படைக்கலம், அமரரை அமரின்
ஏசுவிப்பது, எவ் உலகமும் எவரையும் வென்று
வீசு வெற்பு இறத் துரந்த வெங்

(96-1)

கணையது - விசையின்

பூசுரர்க்கு ஒரு கடவுள்மேல் சென்றது போலாம்.

 

995.

மயன் படைக்கலம் அழிந்தது கண்டு, இகல் மறவோன்,
'சயம் படைத்தது நன்று; இவன் செருக்கினைத்

தடுக்க,