| 1012. | ஆனபோது, அங்கு அரக்கன் அத் தேரொடும் வான்மீது எழ, மாதலி தூண்டிட, ஞான நாயகன் தேரும் எழுந்துறப் போனது; அண்டப்புறத்து அமர் கோலினார். | (163-1) |
| |
| 1013. | அஞ்சல் இன்றி, அமர்க் களத்து, ஆரியன் வெஞ் சினத்தோடு வேல் அரக்கன் பொர, எஞ்ச ஏழு திவசம் இராப் பகல், விஞ்சு போர் செயும் வேலையில், வீரனும். | (182-1) |
| |
| 1014. | ஆய கண்டு, அங்கு அமலன் விடும் சரம் சாயகங்களை நூறி, தலைத் தொகை போய் அகன்றிடச் செய்தலும், போக்கிலாத் தீயவன் சினந்து, இம் மொழி செப்புவான்: | (182-2) |
| |
| 1015. | 'துறக்கும் என்பதை எண்ணி சிரத் தொகை அறுக்குமுன் முளைத்து உய்குவது அன்றியே, மறுக்கும் என்று மனக் கொளல், மா நிலத்து இறக்கும் மானுடர் போன்று, என் உயிரும், நீ. | (182-3) |
| |
| 1016. | ஈது அரக்கன் புகல, இராமனும் தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து ஓது உரைக்கு எதிருற்று, என் பகழி இப் போது உரைக்கும்' எனக் கொடு பொங்கினான். | |
| | (182-4) |
| |
| 1017. | மாறுபடத் தேவர்களை ஏவல்கொளும் | (199-1) |
வாள் அரக்கன் மடிய, அன்னான் |
ஏறி வரு பொன் தடந் தேர் பாகனும் |
பொன்றிட பண்டு அங்கு இமையா முக் கண் |
ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின் |
ஏகியதால் - இடையே கூடித் |
தேறு செய்து உழல் போதில், தீவினை |
மாய்த்திடப் போம் நல் வினையே போல. |
| |
| 1018. | 'வான் கயிலை ஈசன், அயன், வானவர் கோன், | |
முதல் அமரர் வாழ்த்தி ஏத்தி, |