| தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து, | (219-1) |
வைகிய நீ, தாய் சொல் தாங்கி, |
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் |
வாளி ஒன்று கடிதின் வந்து, உன் |
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட, |
உளம் நாணினையோ? உயிரும் உண்டோ? |
|
| |
| 1019. | 'அரு வினை வந்து எய்தியபோது, ஆர் அரசே! | (221-1) |
உன்தன் |
திரு வினை நீ பெறுவதற்குத் திருநாமங்களைப் பரவ, ஒருபது வாய் உள; வணங்க, ஒண் முடி பத்து உள, |
இறைஞ்ச, |
இருபது கை உள; இலங்கை என்னாக வீந்தாயே! |
|
| |
| 1020. | 'அரு வினை வந்தெய்திய போழ்து | (221-2) |
ஆர் தடுப்பார்? ஆர் அதனை அறிவார்? |
வீட்டின் |
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் |
திருநாமங்கள் தமைச் சிந்தித்து ஏத்த, |
ஒருபது நா உள; வணங்க, ஒண் முடிகள், |
பத்து உளவே; இறைஞ்ச, மேரு |
இருபது கை உள; இலங்கை என்னாக |
உயிரோடும் இழந்திட்டாயே! |
| |
| 1021. | அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள்' | (242-1) |
என்று |
உன்னி உரைத்தேன்; உரை கேளாது, உத்தமனே! பின்னை இராமன் சரத்தால் பிளப்புண்ட |
உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் |
நோக்காயோ? |
| |
| 1022. | 'ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும் நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்; | |