| ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார் | | தேவிதனை; | பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்? | | (242-2) | | | | 1023. | இந்தனத்து அகில் சந்தனம் இட்டு, மேல் அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து, எந்த ஓசையும் கீழுற ஆர்த்து, இடை முந்து சங்கு ஒலி எங்கும். முழங்கிட, | (245-1) | | | | 1024. | கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து, உற்ற ஈம விதியின் உடம்படீஇ, சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர, மற்ற வீரன் விதியின் வழங்கினான். | (245-2) | | | | 1025. | இனைய வீரன் இளவலை நோக்கி, 'நீ புனையும் நன் முடி சூட்டுதி, போய்' எனா, அனைய வீரன் அடியின் இறைஞ்சவே, 'அனையனோடும் அனுமனைச் சார்க' எனா. | (248-1) | | | 37. மீட்சிப் படலம் | | | | 1026. | மாருதிச் செல, மங்கலம் யாவையும் மாருதிப் பெயர் கொண்டு உடன் வந்தனன்; வீர விற் கை இளவல் அவ் வீடணன் வீரபட்டம் என, நுதல் வீக்கினான். | (4-1) | | | | 1027. | செய்த மா மணி மண்டபத்தே செழுந் துய்ய நல் மணிப் பீடமும் தோற்றுவித்து, எய்து வானவ...............................கம்மி........ ................................................................................ | (5-1) | | | | 1028. | மேவி நாரதனே முதல் வேதியர் ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில் கூவி, ஓம விதிமுறை கொண்டிட, தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே. | (5-2) |
|
|
|