பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்673

1029.

பொய்யினுக்கு ஒரு வெ.................................
................................................................................
உய் திறத்தினுக்கே உவந்து உம்பர்கள்
கையினின் கலசப் புனல் ஆட்டினார்.

(5-3)
 
1030.

வேத ஓசை விழா ஒலி மேலிட,
நாத துந்துமி எங்கும் நடித்திட,
வேத பாரகர் ஆசி விளம்பிட,
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட,

(6-1)
 
1031.

வீர மா முடி சூடிய வீடணன்
வீர ராகவன் தாள் இணை மேவிட,
ஆர் மார்பொடு அழுந்திடப் புல்லினான்.
ஆரினானும் அறிவரும் ஆதியான்.

(10-1)
 
1032.

'ஆதி நாளில், ''அருள் முடி நின்னது'' என்று
ஓதினேன்; அவை உற்றுளது; உத்தம!
வேத பாரகர் வேறுளர் யாவரும்
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய்.

(11-1)
 
1033.

''வஞ்சகக் கொடியான் முனம் வவ்விட,
பஞ்சரக் கிளி என்னப் பதைப்பவள்,
நெஞ்சினில் துயர் நீக்கியது'' என்று, நீ
அஞ்சனைப் புதல்வா! அருள்வாய்'' என்றான்.

(13-1)
 
1034.

'மங்கை சோபனம்! மா மயில், சோபனம்!
பங்கயத்து உறை பாவையே, சோபனம்
அங்கு அ(வ்) ஆளி அரக்கனை ஆரியச்
சிங்கம் இன்று சிதைத்தது, சோபனம்!

(16-1)
 
1035.

'வல்லி, சோபனம்! மாதரே, சோபனம்!
சொல்லின் நல்ல நல் தோகையே சோபனம்!
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய
வல்லியங்கள் வதைத்தது, சோபனம்!

(16-2)
 
1036.

'அன்னை, சோபனம்! ஆயிழை, சோபனம்!
மின்னின் நுண் இடை மெல்லியல், சோபனம்!