பக்கம் எண் :

674யுத்த காண்டம் 

அன்ன ஆளி அரக்கனை ஆரிய
மன்னன் இன்று வதைத்தது, சோபனம்!

(16-3)
 
1037.

'நாறு பூங் குழல் நாயகி, சோபனம்!
நாறு பூங் குழல் நாரியே, சோபனம்!
ஆறு வாளி அரக்கனை ஆரிய
ஏறும் இன்றும் எரித்தது, சோபனம்!'

(16-4)
 
1038.

சொன்ன சோபனம் தோகை செவி புக,
அன்னம் உன்னி, அனுமனை நோக்கியே,
'அன்ன போரில் அறிந்துளது, ஐய! நீ
இன்னம் இன்னம் இயம்புதியால்' என்றாள்.

(16-5)
 
1039.

சென்றவன்தன்னை நோக்கி, 'திருவினாள் எங்கே?'

(46-1)

என்ன,

'மன்றல் அம் கோதையாளும் வந்தனள்,

மானம்தன்னில்'

என்றனனின்; என்னலோடும், 'ஈண்டு நீ கொணர்க'

என்ன,

'நன்று! என வணங்கிப் போந்து நால்வரை,

'கொணர்க!' என்றான்.

 
1040.

காத்திரம் மிகுத்தோர், நால்வர், கஞ்சுகிப்

(46-2)

போர்வையாளர்,

வேத்திரக் கையோர், ஈண்டி, விரைவுடன்

வெள்ளம்தன்னைப்

பாத்திட, பரந்த சேனை பாறிட, பரமன் சீறி,
'ஆர்த்த பேர் ஒலி என்?' என்ன, 'அரிகள்

ஆர்ப்பவாம்' என்றார்.

 
1041.

என்றபோது இராமன், 'ஐய! வீடணா! என்ன

கொள்கை!

மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம்

அன்றி