பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்675

துன்றிய குழலினார்தம் சுயம்வர வாஞ்சை, சூழும்
வென்றி சேர் களத்தும், வீர! விழுமியது அன்று,

(46-3)

வேலோய்!'

 
1042.

அற்புதன் இனைய கூற, ஐய வீடணனும் எய்தி,
செப்பு இள முலையாள் தன்பால் செப்பவும்,

(46-4)

திருவனாளும்,

அப்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த

அண்ணல்

ஒப்பினைக் கண்ணின் கண்டே, உடம் நினைந்து,

இனைய சொன்னாள்.

 
1043.

'அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால்,
பழிபடும் என்பரால், பாருளோர் எலாம்;
விழுமியது அன்று, நீ மீண்டது; இவ் இடம்
கழிபடும்' என்றனன், கமலக்கண்ணனே.

(67-1)
 
1044.

கண்ணுடை நாயகன், 'கழிப்பென்' என்றபின்
மண்ணிடைத் தோன்றிய மாது சொல்லுவாள்:
'எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான்
விண்ணிடை அடைவதே விழுமிது' என்றனள்.

(67-2)
 
1045.

பொங்கி சிந்தையள் பொருமி, விம்முவாள்,
'சங்கையென்' என்ற சொல் தரிக்கிலாமையால்,
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே,
அங்கியின் வீழலே அழகிதான்அரோ.

(67-3)
 
1046.

'அஞ்சினென், அஞ்சினென், ஐய! அஞ்சினென்;
பஞ்சு இவர் மெல்லடிப் பதுமத்தாள் தன்மேல்
விஞ்சிய கோபத்தால் விளையும் ஈது எலாம்;
தஞ்சமோ, மறை முதல் தலைவ! ஈது?' என்றான்.

(86-1)

 
1047.

கற்பு எனும் கனல் சுட, கலங்கி, பாவகன்
சொல் பொலி துதியினன், தொழுத கையினன்,
'வில் பொலி கரத்து ஒரு வேத நாயகா!
அற்புதனே! உனக்கு அபயம் யான்' என்றான்.

(88-1)