பக்கம் எண் :

676யுத்த காண்டம் 

1048.

'இன்னும், என் ஐய! கேள்; இசைப்பென் மெய்,

(95-1)

உனக்கு;

அன்னவை மனக் கொள கருதும் ஆகையால்,

முன்னை வானவர் துயர் முடிக்குறும் பொருட்டு

அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள்.

 
1049.

'யான் புரி மாயையின், சனகி என்று உணர்ந் -

(95-2)

தான் கவர் அரக்கன்; அம் மாயை என் சுடர்க்

கான் புகக் கரந்தது; இக் கமல நாயகி

தான் பரி தவத்து உனைத் தழுவ உற்றுளாள்.'

 
1050.

ஐயன் அம் மொழியினை அருளும் வேலையில்,

(97-1)

மை அறு மன்னுயிர்த் தொகைகள் வாய் திறந்து,

ஒய்யென ஒலித்ததால்; உவகை மீக்கொள,

துய்ய வானவர் துதித்து, இனைய சொல்லுவார்:

 
1051.

'மிகுந்த மூன்றரைக் கோடியில் மெய் அரைக் கோடி

(97-2)

உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள

எம்

அகத்தின் நோய் அறுத்து, அருந் துயர் களைந்து,

எமக்கு அழியாச்

சுகத்தை நல்கிய சுருதி நாயக!' எனத் தொழுதார்.

 
1052.

'திருக் குவால் மலி செல்வத்துச் செருக்குவேம்

(109-1)

திறத்துத்

தருக்கு மாய்வுற, தானவர் அரக்கர் வெஞ் சமரில்

இரிக்க, மாழ்கி நொந்து, உனைப் புகல் யாம் புக,

இயையாக்,

கருக்குளாய் வந்து தோற்றுதி! ஈங்கு இது கடனோ?'

 
1053.

என்ற வாசகம் எறுழ் வலித் தோளினான் இயம்ப,

மன்றல் தாங்கிய மலரவன், வாசவற் கூவி,