| 'துன்று தாரினோன் சுரருடன் துருவினை துடரச் | (114-1) |
சென்று, மற்று அவன்-தருக' என வணங்கினன், |
சென்றான். |
| | |
| 1054. | 'எனக்கும், எண்வகை முனிவர்க்கும், இமையவர் | (123-1) |
உலகம்- |
தனக்கும், மற்று இவள் தாய் என மனக் கொளத் |
தகுதி; |
மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள் |
மலராள்; |
புனத் துழாய் முடிப் புரவலன் நீ; நிறை புகழோய்!' |
|
| | |
| 1055. | 'வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம் | (141-1) |
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால் |
எங்குளார் எனும் இடம் உளது; அதன் மிசை ஏறி, |
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்' |
என்றான். |
| | |
| 1056. | 'மங்கலா நிதி வடதிசை வானவன் மானம்; | (142-1) |
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால், |
எங்கு உளார்?' எனும் இடம் உளது; இதன் மிசை |
ஏறி, |
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்' |
என்றான். |
| | |
| 1057. | 'வாங்கினான், அளகேசனைத் துரந்து, இந்த மானம்; | (142-2) |
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும், உரவோய்! |
ஆங்கு இடம் பினும் உடையதாம்; அதுதனில் ஏறி, |
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்' என்றான். |
|
| | |
| 1058. | வாங்கினான் அது, மா நிதியோடு அவன் மானம்; | (142-3) |
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால், இன்னும், |
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது; அதனை நீ ஏறி, |
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்' என்றான். |
|