| குரிசிலை, வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க; | |
| அன்றேல், | |
| உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென்'என்று | |
| எழுதிவிட்டான். | (142-8) |
| | |
| 1064. | அக் கணத்து அருகு நின்ற அனுமன், கைத் | |
| திருமுகத்தைத் | |
| தக்கவன் நீட்ட, வாங்கி, தன் தலைமிசையில் சூடி, | |
| 'இக்கணம் வருவென்; வாழி! இராம!' என்று, இரு | |
| தோள் கொட்டி, | |
| மிக்க மா மடங்கல் போல, விண்ணிடை விசைத்துப் | |
| பாய்ந்தான். | (142-9) |
| | |
| 1065. | மண்டிப் புக்கனன், மறலிதன் பெரும் பதம்; நரகில் | |
| தண்டிப்புண்டு, அறுப்புண்டு, எரிப்புண்டவர் தம்மைக் | |
| கண்டு, மாருதி கண் புதைத்து, 'அரி! அரி' என்ன, | |
| மிண்டி ஏறினர், நரகிடை வீழ்ந்தவர் எல்லாம். | (142-10) |
| | |
| 1066. | துளங்கி, அந்தகன் வந்து, அடி தொழுதலும், தோலா | |
| வளம் கொள் மாருதி, 'வசந்தனைக் காட்டு' என, | |
| அவனும் | |
| உளம் கலங்கி, 'உன் நாயகன் அடியர் இங்கு | |
| உறார்கள்; | |
| விளங்கு கீர்த்தியாய்! தேடு விண்ணவர் புரத்து' | |
| என்றான். | (142-11) |
| | |
| 1067. | சொன்ன கூற்றுவன் தன்னைத் தன் வாலிடைத் | |
| துவக்கி, | |
| பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப் | |
| புகலும், | |
| முன்னை வந்து கண்டு, இந்திரன், 'முனிவு எனோ?' | |
| என்ன, | |
| 'மன்ன! ஏகுவென்; வயந்தனைக் காட்டுதி' என்றான். | |
| | (142-12) |