பக்கம் எண் :

680யுத்த காண்டம் 

1068.

'வல் அரக்கரை மடித்து, எமை எடுத்த மாருதியே!

(142-13)

இல்லை இங்கு; அயன் உலகிடை அறிதி' என்று

இசைப்ப,

சொல்லும் அங்கு அவன் தன்னையும் வாலிடைத்

துவக்கி,

பல் உயிர்த் திறம் படைத்தவன் உலகிடைப்

பாய்ந்தான்.

 
1069.

சிந்தை தூயவன் செல, உளம் துளங்கு நான்முகனும்

(142-14)

'வந்த காரியம் எது? என, 'வயந்தனைப் பார்த்துச்

சுந்தரத் தடந்தோள் வில்லி நின்றனன்; அவன்தான்

உந்தன் நீள் பதத்துளான்எனின், காட்டு' என

உணர்த்தும்.

 
1070.

'என்னுடைப் பெரும் பதத்தின் மேலாகிய எந்தை

(142-15)

தன்னுடைப் பெருஞ் சோதியின் கீழதாய்த் தழைத்த

மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான்;

விறலோய்!

அன்னவன்தனைக் கொணருதி, ஆங்கு அணைந்து'

என்றான்.

 
1071.

என்ற நான்முகன்தன்னையும், இந்திரன் யமனோடு

(142-16)

ஒன்ற, வால்கொடு துவக்கினன், ஒரு

குதிகொண்டான்;

மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின்

பதத்தில்

சென்று, கண்டு கொண்டு இழிந்தனன், திசைமுகன்

பதியில்.

 
1072.

மலரின்மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க,

(142-17)

குலவு வாசவன், யமனை விட்டு, இரு நிலம் குறுகி,

அலகு இல் வீரன்தன் அடி இணை அவனொடும்

வணங்கி,

சலமும் தீர்த்தனன்; படையையும் ஏற்றினன்,

தேர்மேல்.