பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்681

1073.

ஏறினான் இராமன் தேர்மேல் எழில் மலர்

(142-18)

மாதினோடும்;

ஏறினான் இளைய கோவும், இராக்கதர்

வேந்தனோடும்,

ஏறினான் அனுமன்; சாம்பன், இடபனே, முதலோர்

ஏற,

மாறினார் நிலத்து நின்றார், வசந்த

கோத்திரத்திலுள்ளார்.

 
1074.

ஏறினன், இளைய கோவும், இரவி சேய், சாம்பன்,

(142-19)

நீலன்

'ஏறினன் வாலி மைந்தன்' என்றனர்; பலரும் ஏற,

சீறிய கும்பகன்னன் சினத்திடைச் சிதைந்து பட்ட,

மாறிலா வசந்தன் சேனை நின்றது, மாறி மண்மேல்.

 
1075.

வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும், மயிலும்

(142-20)

கண்டு கைதொழு வானரக் கடலும், மற்று யாரும்

எண் தவாத பொன் மானமீது இருந்திடும் இயற்கை

அண்டர் நாதனும், வானமும் அமரரும் ஆமால்.

 
1076.

பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ளப் படை;

(142-21)

அவர்தம்மை,

'வாரும் தேரின்மேல்' என, 'கும்பகர்ணன் வந்து ஏன்ற

போரில் எம் படைத் தலைவனோ பொன்றினான்;

அவனை

நீர் எழப் பிசைந்து, இட்டனன் நெற்றியில்' என்றார்.

 
1077.

ஆழி வெள்ளம் ஓர் எழுபதும், அனுமனே முதலாம்

(142-22)

ஏழும் மூன்றும் ஆம் பெரும் படைத் தலைவரை

இராமன்

சூழ நோக்கினன்; சுக்கிரீவன்தனைப் பாரா,

'வாழி மாப் படை அனைத்தும் வந்தன கொலோ?'

என்றான்.