| 1078. | இரவி கான்முளை இறங்கி வந்து, இராமனை | (142-23) |
இறைஞ்சி, |
'சுருதியாய்! ஒரு பேர் அருள் சொல்லுவ; தொடர்ந்து |
வருவதான இச் சேனையில் வசந்தன் என்று |
உரைக்கும் |
ஒருவன் வந்திலன்; கண்டருளுதி' என உரைத்தான். |
|
| | |
| 1079. | கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன் | (142-24) |
இசைந்த போரின் வந்து எய்தலும், இவன்தனை |
எடுத்துத், |
தசைந்த தோல், மயிர், எலும்பு, இவைதமைத் |
தெரியாமல், |
பிசைந்து மோந்து, உடற் பூசினன், பெரு நுதற்கு |
அணிந்தே. |
| | |
| 1080. | 'இசைந்த சீராமன் ஓலை; இலங்கையில் பூசல்தன்னில் | (152-25) |
வசந்தனைக் கண்டதில்லை; மதித்தவாறு அழகிது |
அம்மா! |
வசந்தனைக் கொண்டுதானும் வருக! எனோ? |
வாரானாகில், |
நமன் குலம் களைவென்' என்றான் - 'நாளை வா' |
என்ற வீரன். |
| | |
(இதன்பின் 142-8, 9, 10, 11 என்ற பாடல்கள் உள்ளன.) |
| | |
| 1081. | 'செல்வனே! இன்னம் கேளாய்; யான் தெரி பாசக் | (142-30) |
கையால் |
அல் எனும் அரக்கர்தம்மை வம்மின்!' என்று |
அழைத்து, மெள்ள |
நல் இருட் பரவை மேனி நாரணன் தமரைக் |
கண்டால், |
'செல்லவே போமின்' என்று விடுக்குவென், செவியில், |
செப்பி. |
| |
(இதன்பின் 142-12, 13, 14, 15, 16, 17 என்ற பாடல்கள் உள்ளன.) |